Sunday, February 25, 2018

உருகுபவன்



ஓசையின்றி ஒருவர் அழக்காண்பதைப்போல நெஞ்சுருக்குவது பிறிதில்லை. ஓசை பிறருக்கான அழைப்பு, பகிர்வு. ஓசையின்றி அழுபவர் தன்னைச் சூழ்ந்திருக்கும் காற்றுவெளியை திரையென்றாக்கி ஒளிந்துகொள்பவர். அனல் எரிய உருகும் அரக்குப்பாவை எனத் தோன்றினான் கர்ண – என்றவரி அளித்த மனச்சோர்வு மிகுதி. என்னால் அதற்குமேல் படிக்கவே முடியவில்லை. மனசாட்சியுள்ள ஒருவனின் துக்கம். அவனால் பாஞ்சாலியை அவமதித்ததை ஏற்கமுடியவில்லை. மலம் தின்றவன்போல உணர்கிறான். அதேபோல துரியோதனனை எதிர்க்கமுடியவில்லை. அவன் முன் மனம் கனிந்துவிடுகிறான். ஆகவே குடிக்கிறான். தன்னைத்தானே அழித்துக்கொள்கிறான்.


அந்த அழுகையை நான் பலமுறை பர்த்திருக்கிரேன் மிகமுக்கியமான திறமைகள் உடையவர்கல் இப்படி தன்னைத்தானே அழித்துக்கொள்வதும் கதறியழுவதும் மிகவும் மனம்கலங்க வைப்பவை. என் அப்பா அழுவதைக் கண்ட ஞாபகம் இருக்கிறது. அப்பா அழ அக்காவும் அம்மாவும் அழ வீடே அழுதுமுடிக்கும். அம்மா ஜெபம் செய்வார்கள். எல்லாமே சரியாகிவிடும் என்று அன்றைக்குத்தோன்றும். மறுநாள் அப்பாவால் அப்படிக்குடிக்காமலிருக்கமுடியாது. அந்தக்காட்சிகளெல்லாமே அந்த அழுகையில் இருந்துமனதிலே நிழலாடின

ஜெ