ஜெ,
இன்றைய அத்தியாயத்தில்
வந்த ஒரு வரி என்னை மீண்டும் வெளியே கொண்டுசென்றது. ஒரு கதையிலிருந்து வெளியே கொண்டுசெல்லும்
வரி அந்தக்கதையின் வெவ்வேறு தளங்களை நமக்கு கொஞ்சம் கடந்தால் சுட்டிக்காட்டுகிறது. பாறை உப்பையும் அனலையும் உள்ளே கொண்டிருப்பதுபோல உடல் உயிரையும் உள்ளத்தையும் தன்னிடம் பிடித்து வைத்திருக்கும் ஆற்றல்கொண்டிருக்கிறது. அத்திறனை உடல் கைவிடுகையில் உயிரும் உள்ளமும் எழுந்து அலையத் தொடங்குகின்றன. அவற்றுக்கு காலமும் இடமும் இல்லை.
இந்தவரி இனிமேல் மனம்சிதறிப்போய் அமர்ந்திருப்பவர்களைப் பார்க்கும்போதெல்லாம் ஞாபகம்
வரும் என நினைக்கிறேன்.
அருண்.ஆர்