ஜெ
புருஷமேத வேள்வியைப்பற்றிய செய்திகள்
கொஞ்சம் ஒவ்வாமையை அளித்தன. ஆனால் ‘புருஷமேத வேள்வியை பாய்வதற்கு முன் சிம்மம் நிலத்திலறைந்து முழங்குவதுடன் ஒப்பிடுகின்றன நூல்கள்’ என்றவரி அதன் தர்க்கம் என்ன என்று
சொல்லியது. அதேபோல போருக்கு முன்னால் ருத்லெஸ் ஆக இருப்பதற்காக சொந்த மகனை பலியிடும்
புத்ரமேத வேள்விகூட இருந்திருக்கிறது என்ற வரியிலிருந்து மேலும் அந்த வெறியை புரிந்துகொள்ளமுடிகிறது.
போர் ஒரு பெரிய விஷயமாக இருந்த அந்தக்காலகட்டத்திற்குரியது இது. இன்று புரிந்துகொள்வது
கொஞ்சம் கஷ்டம்தான்
ஜெகன்னாதன்