Friday, February 16, 2018

அயிரை



ஜெ


இந்த அத்தியாயத்தின் சமையல் செய்திகள் சிறப்பானவை. நீங்கள் சுருக்கமாக அளிக்கும் சமையல்செய்திகளை கொஞ்சம் காமன்சென்ஸுடன் நான் சமைத்துப்பார்ப்பதுண்டு. சுவையாக இருக்கும். பொதுவாக மகாபாரதகாலச் சமையல் எளிமையான முறையில்தான் இருந்திருக்கிறது. அன்று கிடைக்கும் சாதாரணமான பொருட்களைக்கொண்டு சுவையாகச் சமைக்கிறார்கள் என நினைக்கிறேன். துருவிய இளம்பனங்கொட்டைப் பருப்புடன் சேர்த்து ஆவியில் வேகவைக்கப்பட்ட அயிரைமீன் கூட்டு என்ற வரியை வாசித்ததும் ஒரு பரவசம் ஏற்பட்டது. இதை மகாபாரதத்தில் எழுதியிருக்கிறீர்கள். இந்தக்கூட்டு நிஜமாகவே புதுக்கோட்டை வட்டாரத்தில் இருபது வருஷம் முன்னாடி இருந்தது. மிகச்சுவையாக இருக்கும். பனங்கொட்டையின் பருப்பு துருவின தேங்காய் மாதிரியே இருக்கும். பச்சைமிளகாய் போட்டு அயிரைமீனை கலந்து கூட்டாக வைப்பார்கள். அற்புதமாக இருக்கும்.


ஜெ