ஜெ
முயங்கும்போது
துரியோதனனின் நிழலாக சுதர்சனை கண்டது கலியின் வடிவம்தானே? புஷ்கரன் தன்னை அந்தக்காளையுருவிடம்தான்
ஒப்படைக்கிறான். செத்துப்போன காளைவடிவம் எழுந்து வந்ததுபோல வந்து அந்தத் தெய்வம் அவனை
ஆட்கொள்கிறது.
சுதர்சனை துரியோதனனை
ஆழமாக அறிந்துவிட்டாள் என்ற எண்ணம் ஏற்பட்டது. நிழல் என்பது உண்மை அல்ல. ஆனால் உண்மையின்
ஒரு தோற்றம் அது. அவன் கலிவடிவம் கொண்டவன்தான். அவனிடமிருந்து தப்பி அவள் மாளவம் போன்ற
நகர்களிலெல்லாம் அலைந்துகொண்டிருக்கிறாள்
மனோகரன்