Monday, February 19, 2018

புருஷமேத வேள்வி



ஜெ

புருஷமேத வேள்வியைப்பற்றி வாசித்துப்பார்த்தேன். அது உண்மையில் நிகழ்ந்ததா அல்லது வெறும் உருவகக்கற்பனையா என்பதைப்பற்றி ஆய்வாளர்களிடையே ஏராளமான சர்ச்சைகள் உள்ளன. புருஷமேதம் போன்ற அதர்வ வேத வேள்விகள் தொன்மையான அசுர வேதம் போன்றவற்றிலிருந்து வந்திருக்கலாம் என்றும் அவை வேதத்தில்குறியீடாக அடாப்ட் செய்யப்பட்டன என்றும் பொதுவாக சொல்லப்பட்டுள்ளது. புருஷமேதவேள்வியை எந்த அரசனாவது செய்ததற்கான கல்வெட்டுச்சான்று ஏதுமில்லை. ஆனால் அதைச்செய்வதற்கான குறிப்புகள் ஏராளமாக உள்ளன. ஆகவே அது மகாபாரதகாலத்தில்கூட அரிதாக இருந்திருக்கலாம். பின்னர் குறியீடாக ஆக்கியிருக்கலாம். நீங்களும் அதை அசுரமாமன்னர்கல் செய்தது என்றுதான் சொல்கிறீர்கள்


மகாதேவன்