Friday, February 16, 2018

நம் கருத்துக்கள்



அன்பு ஜெ,
       
வாழ்கையில் நாம் பெரிதாக நினைத்து சொன்ன சொற்றொடரானது நாம் படிக்கும் நாவலில் இடம்பெற்றதைக் கண்டு சின்ன துணுக்குறுதலை அடையும் நிலை சில சமயம் நேருவதுண்டு.அப்படி ஒன்று தான் , நான் என் குழந்தைகளிடம் , பெரிதாக அர்த்தம் தெரியாமல் சில பாக்களின் மூலம் கடவுளைச் சேவிக்கும் செயலைச் செய்தாலும், பலன் நிச்சயமே !ஏனென்றால் உடையவன் அப்பாசுரத்தால் நிறைவுக்கொள்வதால் என்பேன்.மருந்தை உட்கொள்பவன் அதன் வேதியக்கணிமங்களைத் தெரியாமல் எடுத்துக் கொண்டாலும் பயனையே அடைவான் என்பதை தாங்கள் ஒரு சந்தர்ப்பத்தில் வெளியிட்டிருந்தீர்கள்

.           
அதே போன்று ஒருவர் பேசும்போதுஉங்கள் குழந்தைகளிடம் கூறுங்கள், கல்வி க்கடவுளான ஹயக்ரீவரைச் சில நொடி தியானித்து விட்டு படிக்க ஆரம்பிக்கும்படி என்றார்.நான் அதை மறுத்து, பிள்ளை கள் , உடல் ரீதியான சில செயல்கள், (.ம் ) , விளக்கேற்றுதல், பூச்செய்கைகள் ,மூலம் கடவுளின் அருகே செல்லக்கூடியதற்கான வாய்ப்பு  அதிகம் என்றேன். ஞான நிலையை விட கர்ம நிலைப்பாடு அனைவருக்குமே உகந்தது என்றே நினைக்கிறேன்.     
நிலைக்கண்ணாடிப் போல தங்களின் படைப்பின் உளச்சித்திரங்களைக் கண்டு நானும் என்னை அழகுப்படுத்திக்கொள்கிறேன்  என்று நினைவே இனிக்கிறது.


                     அன்புடன்,

                               செல்வி அழகானந்தன்,

                                                 கடலூர்.

அன்புள்ள செல்வி அவர்களுக்கு

பொதுவாக கருத்துக்கள் என்பவை முன்னரே நிகழ்ந்துவிட்ட தரிசனங்களை மீண்டும் மீண்டும் வேறுவேறு வாழ்வனுபவங்களில் நாம் கண்டடைவதாகவே அமையும். அவை நம் சொற்களில் வெளிப்படும். அடிப்படையான மானுடதரிசனங்கள் உண்மையில் பண்பாட்டின் தொடக்கத்திலேயே கண்டடையப்பட்டுவிட்டன

ஜெ