ஜெ
சுப்ரியையின் பயணத்தைச்
சொல்லும் இந்த இரு அத்தியாயங்களிலும் படிமங்கள் நிறைந்துள்ளன. வைரம்,நங்கூரம் என்னும்
இரண்டு படிமங்களும் ஆழமானவை. நங்கூரம் மென்மையானதும் உருவற்றதுமான தண்ணீரை தொடுத்து
அவ்வளவுபெரிய மரக்கலத்தை தாங்கி நிற்கிறது. வைரத்திற்குள் ஒளி பல்லாயிரம் யோஜனைதூரம்
பயணம் செய்கிறது. இரு படிமங்களையும் கொண்டு சுப்ரியையின் வாழ்க்கையை உருவகம் செய்துகொள்ள
முடிகிறது.
சாரங்கன்