Thursday, February 22, 2018

யானையின் விழி



அன்புள்ள ஜெ

வெண்முரசு தொடங்கி ஐந்தாவது ஆண்டு ஓடிக்கொண்டிருக்கிறது. போகிற போக்கில் ஒரு 'பிளாஷ்' பண்ணிச்செல்லும் உவமைகள் இன்றும் புதிது புதிதாக வந்துகொண்டே இருக்கின்றன.

சூக்ஷ்மை குறுங்கவிதையை யானையின் விழி என்கிறாள். வெகு சிறியது, ஆனால் மாபெறும் ஒன்றுக்கான portal. நான் கோயில்களுக்கு போகும்போது யானையின் கண்களை மட்டுமே பார்ப்பேன். மிகவும் நிதானமானவை, அதன் அச்சுறுத்தும் பிரம்மாண்டம் நமக்குள்ளே தான் வளரும். நவீன் மனோகரனின் 'யாக்கை' கதையில் இரக்கமற்ற கிழவி என்று சொல்லும்போது எனக்கு எப்போதோ பார்த்த யானை விழி தான் ஞாபகத்துக்கு வந்தது.

சூக்ஷ்மையின் வேதம் பற்றிய சொற்கள் Zeno's paradox-ஐ சொல்வது போலிருந்தது.

சுப்ரியையும் சுதர்சனையும் என்ன பேசிக்கொள்கிறார்கள் என்று பார்க்கவேண்டும் !
மதுசூதன் சம்பத்