எவருடைய அன்னையென்றால் என்ன, அன்னையே அவர் என்று எண்ண அங்கே எவரும் இல்லை. தொல்லன்னையரின் நுண்ணுடல்கள் அந்த அவையைச்சூழ்ந்து நின்று தவித்திருக்கவேண்டும் என்று தாரை சொல்கிறாள். கர்ணனை நோக்கிச் சொல்லப்படுவது
அது. பாஞ்சாலியை அவமரியாதைசெய்தவன் அன்னை என்றால் சீறுவான் என அவளுக்குத்தெரிந்திருக்கிறது.
சரியாக அவனை உசுப்பி தன் வேலையைச் செய்கிறாள். அவளுடைய திறமையும் பேச்சும் கண்முன்
தெரிகிறது. இந்த நாவலில் ஒவ்வொரு பெண் கதாபாத்திரமும் அப்படி வேறுபட்டுத் தனித்தன்மையுடன்
தெரிகிறார்கள்.
செல்வராஜ்