ஜெ
சில சிறிய கதாபாத்திரங்கள்
மிக எளிமையாக முடிந்துபோவது அவ்வப்போது ஒர் அதிர்ச்சியை அளிப்பது. உதாரணம் சரபை. அவள்
வெய்யொனில் வரும் கதாபாத்திரம். அவளுக்கு சண்முகவேல் ஒரு நல்ல படம் வரைந்திருந்தார்.
அவளைத்தான் சுஜாதன் அதட்டி மிரட்டினான். அந்தச்சம்பவத்திற்குப்பின் என்ன நடந்தது என்பது
இந்நாவலில்தான் வருகிறது.
அந்த ஆழ்குகைக்குள்
கிடக்கும் பெண் யார்? அது சரபை என்றும் தோன்றியது. சுப்ரியையேதான் என்றும் தோன்றியது.
அதிலிருந்து அவள் விடுபட்டு மேலெழுந்துவிடுவதுதானே இப்போது வந்துகொண்டிருப்பது
இப்போதுள்ள சபரி
மிக மெட்டீரியலிஸ்டிக் ஆன ஒரு சாதாரணமான பெண். ஒன்றுமே புரிவதில்லை. ஒவ்வொரு சேடியும்
ஒவ்வொரு மாதிரி இருக்கிறார்கள். எதிர்மறையானவர்கள். நுட்பமானவர்கள். குத்திக்கிழிப்பவர்கள்.
என்ன ஏது என்றே புரியாத சபரி மாதிரியான பெண்கள். ஒவ்வொருவரும் ஏன் அந்த அரசியரால் தேர்வுசெய்யப்படுகிறார்கள்
என்பதுதான் முக்கியம் என நினைக்கிரேன்
மகாதேவன்