ஜெ
குந்தியும் பலந்தரையும் உரையாடிக்கொள்ளும்
போது சம்பந்தமில்லாமல் தாவிச்செல்லும் பேச்சு எங்கெங்கோ தொட்டுத்தொட்டுச் செல்கிறது.
“அவர் அரசிக்கு அளித்த மாமலரைப் பற்றி சூதர்கதைகள் அங்கே வந்தன.” என்று அவள் சொல்கிறாள்.குந்தி “அவன் அதை அவளுக்கு மட்டும் அளிக்கவில்லை…” என்றாள். “அது அவன் உள்ளம் அல்லவா? மூதன்னையரிடமிருந்து அவன் பெற்றது.” பலந்தரை “ஆம், அது இப்போது தெரிகிறது” என்றாள். இந்த வரியில் அவர்கள் என்ன பேசிக்கொண்டிருக்கிறார்கள்
என்று புரிந்துகொள்வது ஒரு நல்ல வாசிப்பனுபவமாக இருந்தது
கெ.கண்ணன்