ஜெ
குந்திக்கும் பலந்தரைக்கும் இடையே நிகழும் உரையாடல் இனிமையான
ஆனால் நுட்பமான பல இடைவெளிகள் கொண்ட ஒரு அழகான பகுதி. அவள் இப்போது எந்த நிலையில் இருக்கிறாள்
என குந்திக்குத்தெரியும். அதேபோல அவள் முன்பு இருந்த நிலையும்தெரியும். கூடவே அவளுக்குள்
பீமன் மேலிருந்த அன்புகூடத்தெரியும். அவ்வளவு மூர்க்கமாக இருந்தவள் ஒரே பாய்ச்சலில்
அடுத்த நிலைக்குச் செல்வது குந்திக்கு ஒருவகையிலும் ஆச்சரியமாக இல்லை. அதை அவள் எதிர்பார்த்தே
இருக்கிறாள். “அறிவின்மை, ஆனால் நாம் அதிலிருந்து தப்பவியலாது” என்று குந்தி சொன்னாள்.என்ற வரி மிக அபூர்வமானது. இந்த மனவிளையாட்டை பெண்கள்
தெரிந்தேகூட விளையாடுகிறார்கள் என நினைக்கிறேன்.
ராஜசேகர்