Wednesday, February 21, 2018

சுப்ரியையின் குணம்



அன்புள்ள ஜெ

கர்ணனின் மனைவியின் அதிருப்தி, கசப்பு ஆகியவைதான் இதுவரை வெளியாகியிருந்தன. சுப்ரியையின் அந்தக்கதாபாத்திரத்தின் இயல்பு ஏன் அப்படி இருக்கிறது என்பதை இப்போது மெல்லமெல்ல வெண்முரசு காட்டுகிரது. அவளுக்குள் உள்ள சுதந்திர விருப்பம். பறந்துசெல்ல விரும்புகிறாள். சிறைப்பட்டிருக்கிராள் என்பதனால் அந்தக்கோபத்தை எல்லா பக்கங்களிலும் கொட்டிக்கொண்டிருக்கிறாள்.

அவள் அங்கிருந்து கிளம்பியதுமே அவள் மனநிலை மாறிவிட்டது. அவள் எப்போதும் எதிர்பார்த்த மரியாதை ஏதும் அவளுக்கு முக்கியமானதாக ஆகவில்லை. இதை என் குடும்பத்திலேயே பார்த்தேன். என் அத்தை ஒருத்தி மிகமிக மோசமான குணம். எப்போதும் சண்டை, போட்டுக்கொடுப்பது, எரிச்சல். அவள் ஒரு தொழில் ஆரம்பித்தாள். தொசை மாவும் பேக்கிங். அதைச்செய்ய ஆரம்பித்ததுமே பெருந்தன்மையான அன்பான அத்தையாக ஆகிவிட்டாள். அந்தக்குணாதிசயம் ஏன் மாறுகிரது என்றால் அந்தச் சுதந்திரத்தால்தான்


கவிதா.ஆர்