தன் உடலில் இருந்து எழுந்த அணியோசையை வேறு எவரோ தன்னைத் தொடரும் ஓசை என அவள் உணர்ந்தாள். – சுப்ரியையின் உள்ளத்தை
சொல்லும் அரிய வரி இது என நினைத்தேன். பெண்களுக்கு இது தெரியும். கனவில் இந்த நகைகுலுங்கும்
ஓசை கேட்கும். நம் நகைகள்தான். ஆனால் வேறு எவருடைய நகையோ போல ஒலிக்கும். அது ஒரு பெரிய
பதற்றம். நாம் இன்னொருவராக மாறியிருப்பதுபோல. சுப்ரியையைத் தொடர்வது அந்த அரசி என்ற
கோலம்தான். அவள் வெளியே வந்துவிட்டாலும் அது அவளுக்குப்பின்னால் வந்தபடியே இருக்கிறது.
ஆடியை நோக்கும்படி அணிச்சேடியர் சொல்கிறார்கள். அவள் பார்க்கிராள். ஆனால் மனம் அதில்
லயிக்கவே இல்லை. அவள் வெளியே செல்ல விரும்புவது அவள் இருந்துகொண்டிருக்கும் இந்தத்
தோற்றத்திலிருந்துதான்
மல்லி