http://www.jeyamohan.in/107001
எழுத்தாளர் அவர்களுக்கு,
மிக தீவிரமான நாள் இன்று.. அத்தியாயம் துடங்கியது முதல் முடிவு வரை.
துரியன் அசைக்கப்படவே முடியாதவன்.. குருதிசாரலில் அசலையின் பாத்திரம் வர தொடங்கியது முதலே எனோ என் உள்ளம் துரியனின் இரெண்டாவது மனைவி வருவாள் என்றே சொல்லி வந்தது. அசலை செய்தது எல்லாம் அவள் செய்ய கூடியதாக முதலில் எண்ணினேன், ஆணால் அசலையின் பாத்திரம் முழு வடிவில் சுதர்சனையை விட பெரியது.. பானுமதியை யும் பலந்தரையும் அசலையும் ஒரு நேர் கொட்டில் புரிந்து கொள்ளலாம்..
பானுமதி துரியனை விலகாத போது எனக்கு உறுதியாக இவள், சுதர்சனை, வருவாள் என்று தெரியும்.
இவளை இட்டு வர சொன்னவள் பானுமதி. துரியனின் உறுவத்தை வைத்தே காதல் கொண்டவள்.. அவன் கலியின் முழு உருவாகவே உள்ளான் இப்போது.
உண்மையாக மேலும் வரப்போகும் அத்தியாயங்களை படிக்க வேண்டுமா அதை தாங்கும் இடத்தில் நான் உள்ளேனா என்று தினம் என்னிடம் கேட்டு கொள்கின்றேன். முன்பு பன்னிரு படைகளம் அப்படி ஒரு தாக்கம் ஏற்படுத்தியது.. படித்து தாண்டியே ஆக வேண்டும்..
இனி உறங்குவேணா என்பது கேள்வி தான்.
உங்களை, கைகள் கூப்பி தினம் வணங்குகின்றேன்.
நன்றி
ராகவ்