Friday, February 16, 2018

குண்டாசியும் கர்ணனும்



அன்புள்ள ஜெ

கர்ணனின் கதாபாத்திரத்தைச் சரியாகப் புரிந்துகொண்டவன் குண்டாசி. நான் நாகம், கர்ணன் மாநாகம் என்கிறான். குண்டாசியின் அந்தக் குணச்சித்திரவார்ப்பு குடிகாரர்களின் எல்லா மனநிலைகளையும் காட்டுகிறது. சூரியன் கோயிலில் அவன் காட்டும் கித்தாப்பு ஒருவகை. ஆனால் இளம் கர்ணனாக அவன் விருஷசேனனைக் கண்டதுமே ஓடிப்போய் காலில் விழுந்துவிடுகிறான். அழுகிறான். அதன்பின் குடிக்காமலிருக்கிறான். ஆனால் தாரை அங்கிருந்து மேலே சென்று சரியாக கர்ணனின் நஞ்சை தூண்டிவிட்டுவிடுகிறாள்


மகேஷ்