வேள்விச்சாலையின்
சித்திரம் மிகநுணுக்கமான சித்திரங்களால் ஆனது. அந்த இடத்துக்கே சென்றுவிட்டதுபோலிருந்தது.
புகையிலிருந்து வெளிவந்து உள்ளே செல்லும் ஆய்ச்சியரை நான் எங்கோ கண்டதுபோலவே உணர்ந்தேன்.
ஊட்டியில் தைலம் காய்ச்சுபவர்கள் அப்படித்தான் இருப்பார்கள் என்பதை அதன்பின்னர்தான்
உணர்ந்துகொண்டேன்.
அதேபோல வரிகளின்
free flow . வெண்முரசு வாசித்து அந்தமொழிக்குப் பழகி சிலசமயம் அதை வாசிக்கமுடியாமலேயே
கண் மாரிவிட்டதோ என நினைக்கத்தோன்றியது. அவர்களுடன் சொல்முறுகி நின்றிருக்கும்பொருட்டு சேவல் செட்டைவிரிப்பதுபோல இப்போர்க்குமுறலை அஸ்தினபுரியின் அரசன் நிகழ்த்துகிறான் என்று சூதர்கள் இளிவரல் பாடிக்கொண்டிருக்கிறார்கள். என்றவரியை வாசித்தபோது என்ன ஒரு கூர்மையான சொல்கோர்த்தவிதம்
என்று பட்டது. அதை தனித்தனியாக வாசித்தால்தான் மனதில் நிற்கிறது
சிவராமன்