Friday, August 31, 2018

இரு கட்டுரைகள்




அன்புள்ள ஜெ

ஈரோடு விழாவில் வாசிக்கப்பட்ட கட்டுரைகளை தளத்தில் படித்துக்கொண்டிருக்கிறேன். பிரபு மயிலாடுதுறை எழுதிய கட்டுரைகளில் பல செய்திகளைத் தொகுத்து அளிக்கிறார். வெண்முரசை ஆங்காங்கே வாசிப்பவர்கள் இப்படி ஒட்டுமொத்தமாக தொகுத்துப்பார்க்க வேண்டியிருக்கிறது.

வெளிவந்த கட்டுரைகளில் அருணாசலம் மகாராஜனின் கட்டுரை மிகச்சிறப்பானது. கிராதம் நாவலின் அழகியம், தரிசனம் இரண்டையும் அற்புதமாகச் சொல்கிறார். ராஜகோபாலன் ஜானகிராமன் முன்பு எழுதிய கட்டுரையும் இதைப்போலவே எனக்கு மிகவும் உதவியாக இருந்தது

ஆர்.ராஜ்மோகன்



கனவிருள்வெளியின் திசைச் சுடர் , கிராதம்- அருணாச்சலம் மகாராஜன்


திசைதேர் வெள்ளம்



வணக்கம் ஜெமோ,


//திரும்பி வரும்போது தோன்றியது ஒருவேளை நாளையே திசை தேர் வெள்ளம் நாவலைத் தொடங்கிவிடுவேன் என்று. இன்று தொடங்கிவிட்டேன்.//

நாங்கள் பத்தாம் தேதி வரை காத்திருக்க வேண்டுமா.... சத்தியமாக முடியவில்லை... தினமும் அனிச்சை செயலாய் விரல்கள் இன்றைய அத்தியாயத்தை தேடுகின்றன.

வழக்கமாக நீங்கள் இரு வேறு நாவல்களின் நெளிவு சுளிவுகளை உள்வாங்கிக் கொள்ள, அந்த இடைவெளி தேவை என்று சொல்வீர்கள்.

ஆனால், இப்போது ஒரு வகையான நிலையாமை உள்ளத்தை அலைக்கழிக்கிறது.

சித்தம் பிறழ்வதற்குள் நீங்கள் தொடங்கினால் தேவலை!

அன்புடன்
சுவேதா

வெண்முரசில் தந்தையர்- ரகு



மகாபாரத்தில், சாந்தி பர்வத்தில் ஒரு ஸ்லோகம் இது:
  “ பிதா தர்ம; பிதா ஸ்‌வர்க; பிதா ஹி பரம் தபோ: !
   பிதரி பிரதிமாப்ன்னே, பிரியந்தே சர்வ தேவதா: !!”

இதன் அர்த்தம்,
  “என் தந்தையே என் தர்மம்; என் தந்தையே என் சுவர்கம்;
  என் தந்தைதான் என் உலகின் பெரும் தியாகங்களை செய்தவர்;
  அனைத்து தெய்வங்களை காட்டிலும் என் தந்தையே முதன்மையானவர்”

யட்ச வனத்தில் கேட்கப்படும் ஒரு முக்கியமான கேள்வி “துயர்களிலே பெரியது எது?, அதற்கு சொல்லபடும் பதில் மைந்தனை இழக்கும் தந்தையின் துயர். மண்ணில் அதற்கு நிகரில்லை, ஏனென்றால் அம்மைந்தரை ஈன்றதுமே அது தொடங்கிவிடுகிறது””.. ஒரு தாயை விட மகனின் இழப்பு தந்தைக்கு அதிகம் உண்டு.. உடல் சார்ந்த இழப்பு மட்டும் இல்ல அது ஒரு நம்பிக்கையின் இழப்பு.


பொதுவாகவே தந்தையர்கள் அதிகம் பேச படுவதில்லை. ஒரு ஆணின் பெரும் குணமாக அவனின் வீரம், கொடை, அறிவு   ஆகியவை அதிகம் பேசப்படும், ஆனால் தந்தையாக அவனில் மிளிரும் அன்பு (தந்தைமை) அதிகம் பேசு பொருளாக இருந்தது இல்லை.. இதற்கு நேர்மாறாக பெண் என்றாலே அவளின் தாய்மை தான் அதிகம் பேசப்படும். புத்ரன் என்றாலே “புத்” என்ற நரகத்துக்கு போகாமல் தடுப்பவன் என்று அர்த்தம்.


மகா  பாரதத்தில் வரும் தந்தைக்குறிய அனைத்து தருணங்களையும் வெண்முரசு மிக விரிவாகவே பேசுகிறது. வெண்முரசில் திரள் திரளாக அன்னையர்க்கு நிகராக தந்தையரும் வந்து கொண்டே இருக்கிறார்கள். வித விதமான தந்தையர்கள் இதில் வந்து கொண்டே இருக்கிறார்கள் பால்குலேய பிள்ளையில் ஆரம்பித்து, என் தந்தை முதல், உங்கள் தந்தை வரை, நாம் தெருக்களிலோ, நம் பக்கத்து வீட்டிலோ, பேருந்திலோ பார்க்கும் அனைத்து தந்தையரும் திரள் திரளாக  அனைவரும் வந்து கொண்டே இருக்கிறார்கள்.


நண்பர்களே, பாரதமே ஒரு தந்தையின் கனவு தான், பாரதத்தை எழுதியவரே வியாசர் எனும் முது தந்தை தான். காடு இரு கரங்களையும் விரித்து எப்பிடி மரங்களை அள்ளி அள்ளி அனைத்து கொள்கிறதோ, அதே மாதிரி இளையோர்களை அள்ளி அள்ளி அனைத்து கொள்ளும் திருதுராஷ்ட்ரன் எனும் பெருந்தந்தை.துளிர்க்க முடியா விதையின் மரம் பற்றிய பெருங்கனவே பாண்டு என்ற தந்தை எனில், துளிர்ப்பது மட்டுமே கடமை எனும் கொள்ளும்  தீர்க்கதமஸ் என்ற பிரஜாபதி என்கின்ற தந்தை. தந்தையாக மட்டுமே தனை உணர்ந்த துரோணர், தந்தையாக தன்னை என்றும் உணராத விதுரர். இவ்வாறாக பல தந்தைகள்   


திருதுராஷ்ட்ர்ன் எனும் பெருந்தந்தை:


மகாபாரத்தை தழுவி எழுதபட்ட இந்திய இலக்கியங்களில் திருதாவை பற்றி இது வரை சொல்லபடாத ஒன்று வெண்முரசில் வருகிறது. அவரை ஒரு பெருந்தந்தையாகவே காட்டுகிறது. வெண்முரசில் திருதா என்றதுமே ஞாபகம் வருவது அவர் ஒரு பெருந்தந்தை என்பது தான்.
அவர் ஒரு தந்தையாக அறிமுகம் ஆவது துரியன் பிறக்கையிலே. தூக்கி எறிய சொல்லி விதுரர் சொல்ல, யார் என்ன சொன்னாலும், எப்பழி வந்தாலும், தன் மைந்தனை அவர் கைவிடுவதில்லை என்று சொல்கிறார்.


ஒருவன் பிறக்கும்போதே வெறுக்கப்படுகிறான் என்றால் அவனைவிட எளியவன் யார்? அவனுக்கு அவனைப்பெற்ற தந்தையின் அன்பும் இல்லையென்றால் அதை தெய்வங்கள் பொறுக்குமா? அழியட்டும். இந்நகரும் இந்நாடும் அழியட்டும். இவ்வுலகே அழியட்டும். நான் அந்தப்பழியை ஏற்றுக்கொள்கிறேன். என்னை அதற்காக மூதாதையர் பழிக்கட்டும். தெய்வங்கள் என்னை தண்டிக்கட்டும். என் மைந்தனை மார்போடணைத்துக்கொண்டு விண்ணிலிருக்கும் தெய்வங்களிடம் சொல்கிறேன். ஆம், நாங்கள் பழிகொண்டவர்கள். நாங்கள் வெறுக்கப்பட்டவர்கள். ஆகவே தன்னந்தனிமையில் நிற்பவர்கள். எங்களுக்கு வேறு எவரும் இல்லை. தெய்வங்கள்கூட இல்லை. யார் என்ன சொன்னாலும் சரி நான் என் மைந்தனை கைவிடப்போவதில்லை” 


குந்தி குழந்தைகளை அழைத்து கொண்டு ஹஸ்தினாபுரம் வருகிறாள். முகர்ந்து பார்த்து குழந்தைகளை அவன் அடையாளம் கண்டு கொள்கிறான். தருமனை முகர்ந்து தர்மனுக்கு சேற்றுவயலின் மணம். விதைகள் கண்விழிக்கும் மணம்  என்கிறார். அர்ஜுனன் உடலை முகர்ந்து புதுமழை மணம்! இவன் புதுமழைமணம் வீசுகிறான். நறுமண்ணின் மணம். குளிர் மேகங்களின் மணம். இடியோசையின்  என்கிறார். இளங்குதிரைகளின் வாசனை! என்கிறார் நகுல, சகாதேவர்களை பார்த்து.
இசையாக / ராகங்களாக  அவர் குழந்தைகளை ஞாபகம் வைத்து கொள்கிறார். குளிர்ந்த அமைதியான இரவு போன்றவன் 


தர்மன்.அவனுக்குரியது கௌசிகம். அர்ஜுனன் இளவெம்மை மிக்க காலை போன்றவன், அவனுக்குரியது பைரவி. நகுல, சகாதேவர்கள் பறவைகள் அணையும் அந்தி அவனுக்குரியது கல்யாணி. ஒரு பெருந்தந்தையால் மட்டுமே இப்பிடி வாசங்களாகவும், ராகங்களாகவும் குழந்தைகளை ஞாபகம் வைத்து கொள்ள முடியும். “என் தம்பி பாண்டுவுக்குள் வாழ்ந்த நானேதான் அவனாகப் பிறந்திருக்கிறேன் என்று பீமனை பார்த்து சொல்கிறார். ஐவரிலும் அவர் பாண்டுவையே காண்கிறார்


ஆயிரம் கௌரவ சிறுவர்கள் – அவர் முன் அமைதியாக - ஆரவாரமாக இருக்கும் அவர்கள் அங்கு இவர் முன் அமைதியாக இருப்பதை பார்த்து கர்ணன் ஆச்சரியபடுகிறான் - தெய்வங்களை துணைநிறுத்தி கங்கணமும் கணையாழியும் அளித்தபின் மைந்தன் என் கைதொட வந்தால்போதும், தன் பழி குழந்தைகளுக்கு வேண்டாம் என்கிறார்.


இரு தடவை அவர் துச்சலையை கைகளாலே அள்ளி அள்ளி அணைக்கிறார். புயங்களை, கைகளை, விரல் நகங்களை என ஒவ்வொன்றாக தொட்டு தொட்டு உணர்கிறார் - தந்தையின் பேரின்பம் மகளழகை பார்ப்பது.


துரியனை மட்டும் அல்ல அவரால் எந்த குழந்தையையும் தள்ளி வைத்து இருக்க முடியாது – ஏன் என்றாள் அவர் பெருந் தந்தை மட்டுமே


துளிர்க்காத விதை – பாண்டு என்ற கனிவான தந்தை:


குழந்தைகள் இல்லா வீட்டுக்கு என்றாவது சென்று இருக்கிறிர்களா? எங்கள் எதிர்த்த வீட்டில் அதி காலை 4 மணிக்கு  நாய்களை கொஞ்சுவார்கள்...


“தெய்வங்கள் குனிந்து பார்க்கட்டும். யாரிவன் இரவும் பகலும் மைந்தர்களைச் சுமந்தலைபவன் என்று உன்னுடைய படைப்பின் குறை அவன் உடலை முளைக்காத விதையாக ஆக்கியது. கேள் மூடா, மானுடர் உடலால் வாழ்வதில்லை. மண்ணில்வாழ்வது ஆன்மாதான். அகத்தில் பிள்ளைப்பெரும்பாசத்தை நிறைத்துக்கொண்டவனுக்கு உலகமெங்கும் பிள்ளைகள்தான். மிருகங்களின் குட்டிகள் போதும் அவனுக்கு. பாவைக்குழந்தைகள் போதும். ஏன் உருளைக்கற்கள் இருந்தால்கூட போதும்…”


முளைக்காத விதையின் தந்தை எனும் பெருங்கனவு. ஒரு கங்காரு போல தன் குட்டிகளை தோளிலேயே சுமந்து கொண்டு இருந்தான். தர்மனிடம் சொல்லாலும், பீமனிடம் உடலாலும், அர்ஜுனனுடன் விழியாலும் அவன் பேசி கொண்டே இருந்தான். முற்றத்திலும் வேள்விச்சாலையிலும் குறுங்காட்டிலும் எங்குசென்றாலும் பாண்டு தன் உடலில் குழந்தைகளை ஏந்தியிருந்தான்.  அவனை குஞ்சுகளை உடலில் ஏந்தி  செல்லும் வென்சிலந்தி என்றழைத்தனர்.


இப்போது சொல்கிறேனே, இவ்வுலகில் நான் எதையாவது விழைகிறேன் என்றால் அது மைந்தனைத்தான். தெய்வங்களும், விண்ணுலகமும், முக்தியும், அரசும், வெற்றியும், புகழும், செல்வமுமெல்லாம் எவருக்கு வேண்டும்? எனக்கு வேண்டியது என் கையை நிறைக்கும் மைந்தன்… ஒவ்வொருநாளும் நான் கனவில் காண்பவன் என் மைந்தனே!”


பாண்டு இறப்பு – அவன் சிதையை உற்று நோக்கும் யூதிஷ்ட்ரன் – பாண்டு இனி இவனிடமே இருக்க போகிறார்.


தீர்க்கதமஸ் – கட்டற்ற விழைவின் ஊற்று:


இரண்டு ஆண்டுகள் முன்னர் – ஈரோட்டில் இந்த அர்ங்கிலே 45 – 50 வயது நண்பர் – தன் தந்தை பற்றி சொல்ல – அவர் யார் என்று ஜெ கேட்க நாம் தீர்க்கதமஸ் தானே என்று சிரித்து கொண்டே சொன்னார்
கருவிலே பார்வை அற்றவர் – ஆதலால் கட்டில்லா விழைவு கொண்டவர் – வேதம் இயல்பாகவே அமைகிறது –


பிரத்தோஷி கழுத்தில் மங்கலநாண் பூட்டி மணப்பந்தலில் அவள் கைகளைப் பற்றியதுமே அவள் அழகற்றவள் என்று அவர் அறிந்துகொண்டார். மைந்தர் பெருகி குடி விரிந்த பின்னரும் தந்தையென எக்கடமையையும் ஆற்றவில்லை. நான் உனக்கு என் மங்கலநாணாலும் மைந்தராலும் வாழ்த்து அளித்தவன். உன் பிறவி எனக்குமுன் படைக்கப்பட்ட பலிஎன்றார். பிராமணி தண்டகாரண்யத்தில் இருந்த பிற முனிவர்களின் தவக்குடில் தோறும் சென்று நின்று இரந்து கொண்டு வரும் உணவில் பெரும்பகுதியை அவரே உண்டார். அவள் காடுதோறும் அலைந்து சேர்த்து சுமந்து வந்த கிழங்குகளையும் கனிகளையும் அவர் பிடுங்கிப் புசித்தார். பசித்துக் கதறும் மைந்தர்கள் சூழ்ந்திருக்க கரிய தழல் போல் அனைத்தையும் உண்டு நிறைவிலாது அமர்ந்த தன் கணவனை நோக்கியபடி பிரத்தோஷி கண்ணீர் விட்டாள்

.
ஒருபோதும் தந்தைக்கு அருகே அவர்கள் செல்லலாகாதென்று ஆணையிட்டிருந்தாள். அவர் அவர்கள் வளர்வதை அறிந்து சினம் கொண்டார்.

எனக்களிக்க வேண்டிய உணவை இவ்விழிபிறவிகளுக்கு அளிக்கிறாய் நீ. சிறுமையீறே, என்னவென்று என்னை எண்ணினாய்? இவர்களை தீச்சொல்லிட்டு கொல்வேன்உணவு! எனக்கு மேலும் உணவு கொண்டுவந்து கொடு 

என்று கூவினார். மைந்தர் அஞ்சி விலகி நின்று நடுங்கினர். அவர் வஞ்சவிழிகள் உங்களை நோக்கி திரும்பலாகாது. செவிகளில் விழிகொண்டவர் மைந்தரேஎன்றாள் அன்னை


உன்னை அழிப்பேன்! உன் தலைமுறைகளை இருளில் ஆழ்த்துவேன்!என்றார் தீர்க்கதமஸ். செய்யுங்கள்! தன் மைந்தருக்கு தீச்சொல்லிடும் ஒருவர் தனக்கே அதை செய்து கொள்கிறார்” 

என்றார் கௌதமர்.


படகில் உணவை வைத்து – மீனையும், பறவையும் உண்டு உயிர் வாழ்கிறார் – வாலி எனும் அசுர குல அரசர் – மாறா சொல்லின் (வேதம்) துணை கொள்பவனே அரசன் – தன் மனைவியர் – அவன் மூலம் அங்கம், வங்கம், கலிங்கம், சுங்கம், பூண்டரம் – ஐந்து பெருங்க்குடி –


தீர்க்கதமஸின் குருதியில் பிறந்த ஆயிரத்தெட்டு மைந்தர்கள் பொன்மஞ்சள் மூங்கிலால் ஆன சப்பரம் ஒன்றை சமைத்தனர். அதில் அவரை ஏற்றி அங்கனும் வங்கனும் கலிங்கனும் சுங்கனும் நான்கு முனைகளை தூக்கிக் கொண்டு செல்ல, புண்டரன் கொம்பூதி முன்னால் சென்றான். கோல்கள் ஏந்தி தந்தையை வாழ்த்தியபடி மைந்தர்கள் அணி ஊர்வலமாக அவரை தொடர்ந்தனர்

.
கிளைகள் அடிமரத்தை நோக்கலாகாது. திரும்பி நோக்காமல் விலகிச்செல்க!” என ஆணையிட்டார். “தந்தையே, தங்கள் குருதியிலிருந்து நாங்கள் கொண்ட பெருவிழைவாலேயே இங்கிருக்கவும் இவற்றையெல்லாம் மீறி வளரவும் ஆற்றல் கொண்டவரானோம். எங்கள் குடிக்கெல்லாம் முதல்அனலென வந்தது தங்கள் காமம். விழியின்மையால் பெருநெருப்பாக்கப்பட்ட அந்தக் காமத்திற்கு தலைவணங்குகிறோம். அதுவே எங்களுக்கு பிரம்மத்தின் வடிவம் என்று அறிகிறோம். என்றும் எங்கள் குலங்களில் அவ்வனல் அழியாது எரியவேண்டுமென்று அருள்க!” “ஆம், அவ்வாறே ஆகுக!” என்று தீர்க்கதமஸ் அருளுரை புரிந்தார்.


துரோணர் – தந்தை என்று மட்டுமே தன்னை உணர்ந்தவர்:


அக்னி வேசர் – சரத்வான் – கிருபி – பிரதமம் என்கிற ஊர் – சுனையில் தண்ணீர் அருந்தும் ஆண் குதிரைபிறந்தபோது குடிலுக்கு அப்பால் குறுங்காட்டுக்குள் குதிரை ஒன்று கனைத்தபடி கனத்தகுளம்புகள் அறைய ஓடிய ஒலி எழுந்தது. குடிலுக்குள் இருந்து எழுந்த குழந்தையின் அழுகையும் குதிரைக்கனைப்பு போலிருப்பதாக அவனுக்குத் தோன்றியது. இது நான். சின்னஞ்சிறியவனாக. புத்தம்புதியவனாக. அனைத்தையும் மீண்டும் தொடங்கமுடியும். விட்டுச்சென்றவற்றை எல்லாம் அள்ளிவிடமுடியும். வில்லாளி அவன் கை என்றும் நடுங்காது – குழந்தை பெரும் பொழுது அவர் கை நடுங்கிகிறது – அவர் வீழ்ச்சியின் ஆரம்பம்


பெற்றுக்கொள்ளுங்கள் வீரரேஎன்று அவள் மீண்டும் நீட்டினாள். கைகளால் அவனைத் தொடமுடியுமென்றே அவனால் எண்ண முடியவில்லை. கைகள் நடுநடுங்கின. பெற்றுக்கொள்ளுங்கள்என்றாள் வயற்றாட்டி. வேண்டாம், கீழே போட்டுவிடுவேன்என்றான். போடமாட்டீர்கள். அத்தனை தந்தையரும் கைநடுங்குகிறார்கள். எந்தத் தந்தையும் கீழே போட்டதில்லைஎன்று அவள் சிரித்தாள். மைந்தனின் உடல்மேல் தன் கண்ணீர்த்துளிகள் சொட்டுவதைக் கண்டான். உதடுகளை மடித்து அழுத்தி விம்மலை அடக்கியபடி கழுத்து அதிர குழந்தையை தன் முகத்துடன் சேர்த்துக்கொண்டு அஸ்வத்தாமாஅஸ்வத்தாமாஎன்றான்.


வயற்றாட்டி நகைத்தபடி அஸ்வத்தாமனா மைந்தனின் பெயர்? என்ன பொருள் அதற்கு?” என்றாள். குதிரைக்குரல்கொண்டவன்குதிரைகளை ஆள்பவன்என்றான் துரோணன். அவள் அவனிடமிருந்து குழந்தையை வாங்கி உள்ளே கொண்டுசென்றாள். அவன் தன் கைகளை முகர்ந்தான். அவற்றில் மைந்தனின் வாசம் எஞ்சியிருந்தது. கருமணம், விதைகளின் மணம். அஸ்வத்தாமன் அஸ்வத்தாமன் என்று தன் அகம் ஓடிக்கொண்டிருப்பதை உணர்ந்து புன்னகைத்துக்கொண்டான். இனி தன் வாழ்க்கையில் பிறிதொரு ஆப்தமந்திரம் இல்லை என்று அப்போது அறிந்தான்.

அஸ்வத்தாமாவை அவர் தன்னுடன் அழைத்துக்கொண்டு குருகுலத்துக்குச் செல்வார். சிறுகுழந்தையாக அவன் இருக்கையிலே அவனை கைகளில் எடுத்தபடி அவன் விழிகள் வழியாக உலகை நோக்கிக்கொண்டு செல்வதில் தொடங்கிய வழக்கம் குழந்தையை பீடத்தில் அமரச்செய்துவிட்டு அவர் படைக்கலப்பயிற்சியளிப்பார். அஸ்வத்தாமன் விழிதிறந்த நாள்முதல் வில்லையும் வேலையும்தான் பார்த்து வளர்ந்தான். முழந்தாளிட்டு எழுந்தமர்ந்ததுமே தவழ்ந்துசென்று அவன் வில்லைத்தான் கையிலெடுத்தான்.


பாலுக்காக ஊர் தலைவனிடமும், பாஞ்சாலம் சென்று துருபதனிடமும் அவமானப்பட்டு - குருவாக – அர்ஜுனன் Vs அஸ்வத்தாமன் – சிஷ்யனும் மைந்தனும் எப்பொழுதும் சேர முடியாது என்று உணர்தல் – அனைத்து விததைகளையும் கற்று தருதல் – வாக்குறுதி – ஒரு பொழுதும் அஸ்வத்தாமனை கொல்லக்கூடாது.


“துரோணர் குடிலின் படலை மூடியபின் திரும்பி கனத்த குரலில் உன் குருவாக என் ஆணை இது. நீ என்றென்றும் இதற்குக் கட்டுப்பட்டவன்என்றார். ஆணையிடுங்கள் குருநாதரேஎன்றான் அர்ஜுனன். ஒருதருணத்திலும் நீ என் மைந்தனை கொல்லலாகாது. எக்காரணத்தாலும்என்றார் துரோணர். மறுகணமே ஆணைஎன்றான் அர்ஜுனன். துரோணர் நடுங்கும் குரலில் அவன் ஒருவேளை மானுடர் கற்பனைக்கே அப்பாற்பட்ட பெரும் அறப்பிழையை செய்தாலும்என்றார். ஆம், அவ்வாறேஎன்றான் அர்ஜுனன். அவனருகே வந்து சற்று குனிந்து உதடுகள் நடுங்க துரோணர் சொன்னார் நாளை உன் குலத்துக்கும் உனக்கும் பெரும்பழியை அவன் அளித்தாலும்உன் பிதாமகர்களையும் அன்னையரையும் உடன்பிறந்தாரையும் மைந்தர்களையும் உன் கண்ணெதிரே அவன் கொன்றாலும் உன் கை அவனை கொல்லக்கூடாது.அர்ஜுனன் ஆம் குருநாதரே. மூதாதையரும் மும்மூர்த்திகளும் ஆணையிட்டாலும் அவ்வண்ணமேஎன்றான். பெருமூச்சுடன் உடல்தளர்ந்த துரோணர் அவன் தலையில் கை வைத்து மானுடரில் உன்னை எவரும் வெற்றிகொள்ளமாட்டார்கள்என்றார்.

பிருஹத்காயர்:


மூத்தவர் பிருகத்பாகு – தவறுதலாக கொல்லப்படுதல் – அவர் அண்ணி சிதை ஏறுதல் – தன் மகன் இறப்பை எண்ணி அஞ்சுதல் - ஒரு முறை கிணற்றில், நெருப்பு, யானை.. மூன்று முறை காப்பாற்றுதல்
“தந்தைக்கு நிகரான தமையனை கொன்றவன் நீ. மைந்தர்துயரத்தால் நீ மடிவாய் . அன்னையே! அன்னையே! நான் அறியாது செய்தபிழை. என் மைந்தனை விட்டுவிடு. அவன் மேல் இப்பழியை ஏற்றாதே. ஏழுபிறவிக்கும் நான் எரிகிறேன். ஏழுநரகுகளில் உழல்கிறேன்.அன்னை பற்களைக் காட்டி வெறுப்புடன் மைந்தர்துயருக்கு ஏழுநரகங்களும் நிகரல்லஅதுவே உனக்குஎன்றார்”


என் மைந்தன் எனக்கு அறத்தைவிட மேலானவன்என்றார் அவர் - நீர் அள்ளி விட்டு தெய்வங்களை தொழுது வேண்டிக்கொண்டிருக்கிறார் - காட்டுவிலங்குபட்ட புண் என   மேல் அவர்கொண்ட அன்பு அவர் உயிர் உண்டே அமையும் 

.
எவ்வினையாயினும் அழிப்பேன். எழுதிய ஊழுக்கு இறைவனை வரவழைத்து என் மைந்தனை மீட்பேன். எதுவென்று மட்டும் எனக்கு சொல்லுங்கள்என தன் நெஞ்சிலறைந்து கூவினார்


ஜயத்ரதனை கொல்பவர்கள் தலை வெடித்து இறப்பார்கள் – அழிவின்மையின் அச்சம் -

அர்ஜுனன் என்கிற தந்தை:


ஜாததேவர் – மகனை மீட்க – எமலோகம் – தடுக்கும் யூதிஸ்டரை கொன்று – தன் குருதியை நிறை வைத்து குழந்தையை மீட்கிறான் – தந்தைமை – தன் குழந்தைக்கு மட்டும் அல்ல அனைவர்க்கும் தந்தை -  அபிமன்யு – எப்பொழுதும் சினந்து கொண்டே – அபிமன்யு Vs அரவான் – பலி ஆவதை தடுக்கும் – தந்தை என்பதை மறுக்க முடியாமல் சம்மதம் சொல்வது


விஷ்வாமித்ரன் எனும் தந்தை:


ஹரிச்சந்திரன் இக்ஷ்வாகு வம்சம் – 100 மனைவியர் – வேள்வி செய்து வருணனை வரவழைத்து - ஒரு வழி உள்ளது, என் மைந்தன் தக்‌ஷசவர்ணியை உனக்கு மைந்தனாக அளிக்கிறேன். உன் மைந்தனுடலில் அவன் இரு வியாழவட்டகாலம் வாழ்வான். அதன்பின் அவன் மீண்டு வந்தாகவேண்டும்” என்றான் வருணன் - ஹரிச்சந்திரனின் முதல் மனைவி கருவுற்று அழகிய மைந்தனை ஈன்றாள். அவனுக்கு ரோஹிதாஸ்வன் என பெயரிட்டார்கள் - மைந்தனுக்கு இருபத்துநான்கு அகவை நிறைந்ததும் ஒருநாள் கனவில் பாசமும் அலைபடையுமாக முதலைமேல் ஏறிவந்த வருணன் “உன் சொல் நிறைவேறும் நாள் வந்துவிட்டது. உன் மைந்தனை வேள்விப்பலியாக அளி” என்று கோரியபோதுதான் தன் வாக்குறுதியை ஹரிச்சந்திரன் நினைவுகூர்ந்தான். திகைத்து “என் மைந்தனையா? நான் அவனை இந்நாட்டை ஆள்வதற்காகவே ஈன்றேன். நான் இறந்தபின் அவன் வாழ்வதைக் காணவே உயிர் வாழ்கிறேன்” என்றான். “அவன் என் வேள்விக்கு பலியாக வந்தாகவேண்டும். அது உன் சொல்” என்றான் வருணன். “மாட்டேன். ஒப்பமாட்டேன்” என்று கதறியபடி ஹரிச்சந்திரன் கண்விழித்தான். ரோஹிதாஸ்வன் ஊர் ஒர்ரக செல்கிறான் –  உனக்கு மாற்றாக வேதம்கற்ற அந்தண இளைஞன் ஒருவன் விரும்பி வந்து வேள்விப்பலியாக ஆவான் என்றால் நீ உயிர்பிழைக்கலாம்” என்றார் அந்தணர். அப்படிப்பட்ட அந்தணரைத் தேடி ரோஹிதாஸ்வன் பயணமானான்.


அஜிகர்த்தர் – மூன்று மைந்தர்கள் -  அவர்களுக்கு நாய்வால், நாய்குறி, நாய்குதம் என்று பெயரிட்டிருந்தார் – முறையே சுனப்புச்சன், சுனக்ஷேபன், சுனலாங்குலன் - அவர்களுக்கு வேதங்களை சொல்மாறாது கற்பித்திருந்தார் அஜிகர்த்தர் - அவர் மைந்தர்களில் ஒருவன் தனக்காக வேள்விப்பலியாக நிற்பான் என்றால் ஆயிரம் பசுக்களை கொடையளிப்பதாகவும் அவற்றின் நெய்ப்பயனால் பத்தாண்டுகளில் போதிய செல்வத்தை சேர்த்து அவர் விண்புகும் வேள்வியைச் செய்யலாம் என்றும் சொன்னான் - பின்னர் மைந்தனிடம் திரும்பி “நீ இவருடன் செல்க! இவர் காட்டும் வேள்விப்பந்தலில் உன் உயிரை உகந்து பலியாக அளி. இது உன் தந்தையின் ஆணை” என்றார். “அவ்வாறே” என்று சுனக்ஷேபன் தலைவணங்கினான்- அனைத்து பிரமணர்களும் மறுக்க மேலும் ஆயிரம் பசுக்களை பெற்றுக்கொண்டு எங்கள் வேள்விப்பலியை நிறைவேற்றி அருள்க!” என்று மீண்டும் அஜிகர்த்தரிடமே சென்றான் – தானே  தானே உத்கர்த்தராகவும் அத்வர்யுவாகவும் பிராமணராகவும் அமர்ந்து வேள்வியை முழுமைசெய்தார்.- பிறகு பத்தாயிரம் பசுக்களுக்காக ஹோதாவாகவும் அமர்ந்து வேள்வி நிறைவு செய்ய முற்பட்டார் - விஸ்வாமித்திரர் வேள்விச்சாலைக்குள் நுழைந்தார். “மைந்தா, உன் விழிகளை மறந்து என்னால் துயிலமுடியவில்லை. இவ்வேள்விப்பலியை நான் தடுக்கிறேன்” என்று கூவினார். “வேள்விக்கென நிறுத்தப்பட்ட விலங்கை விடுவிப்பவன் வேள்வியைத் தடுத்த பழியை சுமக்கவேண்டும். முனிவரே, நீர் நீங்கா இருளுலகுகளுக்குள் தள்ளப்படுவீர்” என்று அஜிகர்த்தர் சினத்துடன் கூவினார்.


நான் இவனை இப்போதே என் மைந்தனாக ஏற்கிறேன்” என்று விஸ்வாமித்திரர் சொன்னார். குனிந்து அங்கிருந்த கங்கைநீர்க் குடத்தையும் தர்ப்பையையும் கையில் எடுத்து மைந்தனை ஏற்பதற்கான வேதமந்திரங்களைச் சொல்லி “வேதச்சொல் சான்றாக இக்கணம் முதல் இவன் என் மைந்தன்” என அறிவித்தார் - நீ வேள்விப்பலியாகக்கூடாது. வைதிகனாகி சொல்நிறையவேண்டும். இது உன் தந்தையின் ஆணை” என கூவினார்.


சுனக்ஷேபன் அவர் சொன்ன வேதமந்திரத்தைச் சொன்னதும் வானில் இடி எழுந்தது. அனல் விழுந்து வேள்விச்சாலை எரியத் தொடங்கியது. மின்னுருவாக மண்ணில் வந்திறங்கிய இந்திரன் வருணனை வென்று துரத்தினான். அவன் இடிச்சொல் முழங்கியது. “நீ வாழ்த்தப்பட்டாய்” என மும்முறை ஒலித்தது வானம். வேள்விச்சாலை எரிந்தணைந்தது. விஸ்வாமித்திரர் சுனக்ஷேபனை கைபற்றி நெஞ்சோடு சேர்த்து அழைத்துச்சென்றார்.



சாத்யாகி எனும் தந்தை:


பன்றி குட்டிகளுடன் நடந்து செல்லும் தாய் பன்றி போலே – தன் வாயால் முட்டி முட்டி குட்டியை நிரையில் செல்ல வைக்கும் தாய் பன்றி போல – எப்பொழுதும் ஒரு பதட்டம் – தன் குழந்தைகளை நோக்கி கொண்டே இருபத்து – திருத்தி கொண்டே இருப்பது – அறிவுரை செய்து கொண்டே இருப்பது

நம் மரபு – தந்தை இல்லாமல் யாரும் இருக்க விடுவதில்லை - மைந்தர்கள் என்பவர்கள் தன் குருதியில் தன் மனைவியின் வயிற்றில் பிறந்தவர்கள் மட்டும் அல்ல - மண்ணில் பிறந்த குழந்தைகளில் எதை ஒருவன் இது என் குழந்தை என எண்ணி அகம் கனிந்து தந்தையாகிறானோ அவனுக்கு அது அக்கணமே மைந்தனாகிறது. 
மைந்தர்கள் பன்னிரு வகை.


ஔரசன்  - தன் மனைவியிடம் தனக்குப்பிறந்தவன்

ஷேத்ரஜன் - தன் மனைவியை தன் அனுமதியுடன் உயர்ந்தவர்களிடம் அனுப்பி கருவுறச்செய்து பெறப்பட்டவன்

தத்தன் - இன்னொரு குடும்பத்தில் இருந்து உரியமுறையில் தத்து எடுத்துக்கொள்ளப்பட்டவன்

கிருத்ரிமன் - தன்னால் மனம்கனிந்து மகனாக ஏற்றுக்கொள்ளப்பட்டவன்
கூடோத்பன்னன் - மனைவி அவள் விருப்பப்படி இன்னொருவனைக் கூடிப்பெற்ற குழந்தை

அபவித்தன் - உரியமுறையில் காணிக்கைகொடுத்து நாடோடி ஒருவனிடம் மனைவியை அனுப்பி பெறப்பட்டவன் 

மேலே ஆறு - அவர்களை மைந்தர்களல்ல என்று விலக்க எந்நூலும் ஒப்புக்கொள்வதில்லை.”

கானீனன் - மனைவி தன்னை மணப்பதற்கு முன் பெற்றுக்கொண்டவன்
பௌனர்ப்பவன் - தன்மனைவி தன்னைப்பிரிந்துசென்று செய்துகொண்ட இரண்டாவது திருமணத்தில் இன்னொருவனுக்குப் பிறந்தவன்
ஸ்வயம்தத்தன் - நான் உனக்கு மைந்தனாக இருக்கிறேன் என்று தேடி வந்தவன்

கிரீதன் - மைந்தனாக விலைகொடுத்து வாங்கப்பட்டவன்

சகோடன் - கர்ப்பிணியாக மணம்புரிந்துகொள்ளப்பட்ட மனைவியின் வயிற்றிலிருந்தவன்

பாரசரவன் - ஒழுக்கமீறலினால் தனக்கு பிறபெண்களிடம் பிறந்தவன்


அவர்களும் மைந்தர்களே அவர்களுக்கு தந்தை மனமுவந்து அளிக்காவிட்டால் நாட்டுரிமையும் சொத்துரிமையும் இல்லை என்பது மட்டுமே வேறுபாடு”

“தந்தையர்களாக  சுழபடட்டும் இந்த உலகு !
தந்தையர்களாக  நிறையட்டும் நம் மனது !