Sunday, February 4, 2018

வேகம்



அன்புள்ள ஜெ

இந்த இரண்டுநாட்களாக வெண்முரசு உச்சகட்ட விசையுடன் சென்றுகொண்டிருக்கிறது,முழுக்க முழுக்க தெரிந்த ஒருகதையில் இப்படி ஒரு வேகம் உருவாகும் என்று நினைத்திருக்கவே இல்லை. அனைத்துச்சம்பவங்களும் தெரிந்தவை. ஆனால் கோர்த்திருக்கும் விதமும் அவற்றில் ஒருக்கும் திருப்பங்களும் தான் புதியவை. ஆனால் அவையெல்லாமே அந்தந்த கதாபாத்திரங்களின் இயல்புக்கு உகந்தவையாகவும் உள்ளன.

கிருஷ்ணன் சென்று ஐந்து ஊர் மட்டும் போதும் என்று இரந்துகேட்டான் என்று சின்னவயசில் வாசித்தபோதே தெய்வம் என்றால் ஏன் அப்படிச் செல்லவேண்டும் என்று தோன்றியிருக்கிறது. இப்போது அவையனைத்துக்கும் பதிலைச்சொல்லி கூர்மையாக கதை கொண்டுசெல்லப்படும்போதுதான் புதியதாகத்தெரிகிறது மகாபாரதம்.

சபையில் துரியோதனன் பேசுமிடத்தில் இதற்கு அப்பால் என்ன என்றுதோன்றியது. அதன்பின்னர் கிருஷ்ணன் பேசும்போது இதுக்குமேலே என்ன பதில் என்று தோன்றுகிறது.  புனைவு என்றவளவில் இந்த இடங்கள் வெண்முரசின் உச்சங்கள்


அரவிந்த்