Sunday, February 4, 2018

கொட்டில் முறை



அன்பின் ஜெ

நலம் விழைகிறேன். தற்போது பரவலாக பிரபலமாகி வருவது கொட்டில் முறை ஆடு வளர்ப்பு எனும் யுக்தி. தரையிலிருந்து சுமார் ஐந்தடி உயரத்திற்கு மூங்கில் கொம்புகளையோ கல்தூண்களையோக் கொண்டு உயரமெழுப்பி அதன் மீது மரத்தாலான அடித்தளத் தரையின்மேல் ஆடுகளை வளர்ப்பது. முக்கியமாக கறிக்காக வளர்க்கப்படும் பலிஆடுகள். அஸ்த்தினபுரி ஷத்திரிய பேரவை அமைப்பு இந்த கொட்டில் முறையையும், யார் பெரியவன் என்றெண்ணத்துடன் வரிசையாக பேரவைக்குள் (கொட்டிலுக்குள்) வந்தமரும் அரசர்கள் பலி (கறி) ஆடுகளையும் ஞாபகபடுத்துகின்றன. பேரவை அமைப்பு முறையை வாசிக்கும்போது அந்த நீள்வட்ட கொட்டில் என் முன்னே எழுந்தமைந்தது.

அன்புடன் 
தங்கபாண்டியன்.