ஜெ
ஷத்ரியர் அவையில் பானுமதியின் நடத்தை விந்தையானது. ஆனால்
மனுஷமனசின் வியப்புகளுக்கு அளவே இல்லை. அவையிலே திரௌபதி அவமானப்படுத்தப்பட்டபோது
சீறி எழுந்து நியாயம் கேட்டவள் அவளும் மகளும்தான். அவளுக்கு ஆடை அணிவித்தார்கள்.
இப்போது குந்தி அவமானப்படுத்தப்படும்போது அவள் துரியோதனனை சார்ந்திருக்கிறாள்.
காதலுடன் அவனைப்பார்த்துக்கொண்டிருக்கிராள். இதைப்புரிந்துகொள்ளவே முடியவில்லை.
ஆனால் இதை நான் சொந்தவாழ்க்கையிலே பார்த்திருக்கிறேன். எல்லாவிதமான கொடுமைகளையும்
செய்யும் கணவர்களிடம் பெண்கள் பெரிய மோகத்துடன் இருப்பார்கள். கடைசிவரை
அவர்களுக்குத் துணையாகவும் இருப்பார்கள். பெண்களின் இயல்பே இதுதானா என்ற
சந்தேகம்தான் எனக்கு வருகிறது.காந்தாரியும் இப்படித்தான் திருதராஷ்டிர்ருடன் மானசீகமாக கண்மூடித்தனமாக பிணைக்கப்பட்டிருந்தாள். இவள் கண்ளை கட்டிக்கொள்ளவில்லை என்பது மட்டும்தான் வேறுபாடு.
ராஜசேகர்