Thursday, February 1, 2018

காவிய உவமைகள்



ஜெ

ஒரே அத்தியாயத்தில் இரண்டு காவிய உவமைகள் வருகின்றன. இந்த அத்தியாயத்தின் முக்கியத்துவமே இந்த வரிகளில் தான் உள்ளது. குதிரைகள் காட்டை நினைத்துக்கொண்டிருப்பதைப்பற்றிய அசலையின் வரி முதலில். தாரை யானைத்தந்தம் தன் மேல் பட்டத்தைப்பற்றிச் சொல்வது. இங்கு ஒளிகொண்டு நம்மை அணுகுபவை அனைத்தும் பேருருக்கொண்ட இருளால் ஏந்தப்பட்டுள்ளன என்ற வரி. வெண்முரசு ஒரு காவியமாகவே வாசிக்கப்படவேண்டும் என நான் நண்பர்களிடம் சொல்வது இதனால்தான். இந்தவரிகளை விட்டுவிட்டால் நாவலை அணுகவே முடியாது. இந்த இரு வரிகளையும் கொண்டு கிருஷ்ணனைப்பற்றி பெண்கள் நினைப்பதைப்புரிந்துகொள்ளமுடியும்


மகேஷ்