Monday, February 5, 2018

வாக்கு



அன்புள்ள ஜெ

மிகத்தந்திரமாக கணிகர் கண்ணனின் குரல் அவையில் எவரும் செவிகொள்ளாமல் செய்துவிட்டார் என ஒரு அத்தியாயம் முடிந்தது. கண்ணன் வெல்வான் என்று தெரியும். ஆனால் எப்படி என்று தெரியாமல் ஒருவகை பதற்றத்துடன் மறுநாள் வாசித்தேன். கண்ணன் நேரடியாகவே ஒரு தாக்குதலை நடத்தி ஒருசொல்கூட தவறாமல் அனைவரையும் தன் சொற்களைக் கேட்கும்படிச் செய்துவிட்டான். அதேசமயம் தன்னுடைய வேதாந்தக்கொள்கையையும் அந்தச்சபையில் கூர்மையாக முன்வைத்துவிட்டான். அவன் பிராமணர்களை வெளியேறச்சொன்னது ஒரு சின்ன தொடக்கம். ஒருநாடகம். ஆனால் வேதம் என்றால் என்ன என்று அந்தச் ஷத்ரியர்களுக்கு அவன் காட்டிவிட்டான். அந்த வேதமந்திரம் பெரும்பாலான சடங்குகளில் சொல்லப்படுவது. அதில் வழிபடப்படும் பிரம்மம் வாக் வடிவில் உள்ளது என்ற அர்த்தம்கொள்ளல் புதிசு


ஜெயராமன்