அன்புள்ள ஜெ
இரண்டு அத்தியாயங்களிலாக
விரிவாக அஸ்தினபுரியின் ஷத்ரிய அவை பற்றிய விவரணைகள் வந்துகொண்டிருக்கின்றன. எந்தெந்த
அரசர்கள் என்பது பின்னாடி போருக்கு முக்கியமானது. ஆனால் முக்கியமாக இப்போது கவனிக்கவேண்டியது
இது ஆண்களின் உலகம் என்பதும் இதைப் பெண்களின் பார்வையில் சொல்லப்படுகிறது என்பதும்தான்.
வெறும் ஆணவமும் சிறுமையும் கொண்டிருக்கிறார்கள். ஆசைக்காக அனைத்தையும் அழிக்கிறார்கள்
ஆண்கள். பெண்கள் பதைபதைப்புடன் வேறுவழியில்லாமல் அதை நோக்கி நிற்கிறார்கள். அந்தச்சித்திரம்
இங்கே உருவானது. அன்றுமுதல் இன்றுவரை அரசியல் இப்படித்தானே இருக்கிறது என நினைத்தேன்
ராஜ்மோகன்