Thursday, February 1, 2018

பானுமதியும் துரியோதனனும்



அன்பு  ஜெயமோகன்   அவர்களுக்கு,

 பல சந்தர்ப்ப நிகழ்வுகளை தங்கள் கதாமாந்தர்களின் ஊடே தாங்கள் புனைந்து வருவதையும்,அதைத் தங்களிடம் பகிரவும் ,அதனுடைய பாதிப்பின் உச்சத்தை வெளிட தயங்கியே பல நாட்கள் சென்று விட்டன.எனினும் "குருதிச்சாரலில்" பானுமதியின் உச்சக்கட்ட நினைவாகவே அவளின் செயல்பாடுகள் அமையபோவதையே நன்றாக உணரமுடிகிறது.

அதிலும் தன் கணவன் மீது அவள் கொண்ட காதல் பல் வேறு வெளிப்பாடின் ஊடே வெளிப்படுகிறது.வேழத்திற்க்கு ஒப்பாக தன்னவனை வெளிப்படுத்துவதிலும், வேழமானது என்னிலையிலும் வெறுக்கப்படாது என்றும் சிறுமையறியாது என்றும் அவனை உடலால் மட்டுமே விலகியிருப்பதையே உணர்த்துகிறாள் 

பானுமதி.எல்லாவற்றிக்கும் மேலாக அறுபடாதக் குருதி என்று துச்சளை ஆமோதிப்பதன் மூலம் முடிவுறாத காதலாகவே அந்நிகழ்வையாக்க முடிவது தங்களால் மட்டுமே இயற்றக்கூடியதாக இருப்பதை நினைத்து நெகிழ்கிறேன்.

       அன்புடன்,

             செல்விஅழகானந்தன்.