அன்புள்ள ஜெ ,
கணிகர் சொல்லை உணவுடன் பொருத்தி பேசிய இடம் அருமையாக இருந்தது , முதல் பார்வைக்கு இந்த ஒப்புமை ஆச்சிர்யபடுத்தியது , ஆனால் யோசிக்க கணிகர் சொல்லை ஆள்பவர் என தோன்றியது , அவரால் சொல்லை நஞ்சாக உணவாக தன் விருப்பம் போல் மாற்றி அமைக்க முடியும் , இன்னும் சொல்லப்போனால் நஞ்சையே உணவாக அளிக்க முடியும் , அதை செய்பவர் என தோன்றியது .
இவர் எதிர் இடத்தில் கிருஷ்ணர் , சொல்லால் ஒருவரின் மேல்மனதை ( வெளி நடிப்பை ) உடைத்து உண்மை உணர்வை வெளிக்கொண்டு வர இயலும் , பானுமதியில் அதை செய்தார் .
ராதாகிருஷ்ணன்