Wednesday, February 7, 2018

ஈவா பிரவுன்


ஜெ

ஒரு கடிதத்தில் வாசகர் பானுமதியின் நடத்தையைப் புரிந்துகொள்ள முடியவில்லை என்று எழுதியிருந்தார். ஹிட்லருடன் இருந்த ஈவா பிரவுனின் மனநிலையைப்பற்றி நிறையவே எழுதப்பட்டுள்ளன. அவர்கள் அவ்வலவு பெரிய காதலுடன் இருந்தார்கள். அவள் அவருடன் சேர்ந்து உயிர்துறந்தார். ஏன்? இதேபோல பல கொள்ளைக்காரர்கள் கொடுங்கோலர்களுக்கும் பெண்கள் விசுவாசமாக அன்பாக இருந்துள்ளனர்.

காரணம் அவர்களிடம் அப்போது வெளிப்படும் அதிகாரம்தான். அதிகாரம் என்பது பவர். அதை எலிமெண்டல் பவர் என்று ஜித்து கிருஷ்ணமூர்த்தி சொல்வதுண்டு. அது அவர்களிடமிருந்து தெறித்துக்கொண்டே இருக்கிறது. நல்லதோ கெடுதலோ அது தெய்வ ஆற்றல்தான். அது நல்லவிதமாக கிருஷ்ணனில் வெளிப்படுகிறது. இவர்களில் இப்படி வெளிப்படுகிறது. அதற்கு அடிமைப்பட்ட பெண்கள் மீட்பே இல்லாமல் இருப்பார்கள் என்பதில் ஐயமில்லை


ராம்சந்தர்