Friday, February 2, 2018

வெண்முரசின் கதாபாத்திரங்கள்



அன்புள்ள ஜெயமோகன் அண்ணா,

வெண்முரசின் கதாபாத்திரங்கள் அனைவருமே ஒரு வகையில் மெய்அறிவர் தான் அல்லது கணமேனும் மெய்ப்பொருளை உணர்ந்திராதஒருவரும் அவர்களுள் இல்லை என்று தோன்றுகிறது.  போகிறபோக்கில் ஒரு கதாபாத்திரம் சொல்வதும் வியக்கத்தக்க ஒன்றாகஇருக்கிறது.  “நான் எனும் சொல்லைப்போல தூயது பிறிதில்லை என்று என் அன்னை சொல்வாள் என்றாள் தாரை. “தன்முனைப்பு தீயதுஆனால் விழைவிலாத தன்முனைப்புபோல் நலமியற்றுவது பிறிதொன்றுமில்லை.”  உண்மையில் ஊழ்கம் என்பதே எதனோடெல்லாமோசிக்கி உழலும் நானை எல்லாவித தளைகளில் இருந்தும் பிரித்து மீட்பது தானேஅதன் மெய்யில் அதனை நிறுத்துவது தானே?   

வெண்முரசில் எல்லோரும் தெய்வங்களே.  எல்லாவும் தானாகிய மெய்ப்பொருளே இத்தனை பாத்திரங்கள் வகிக்கிறது.


அன்புடன்
விக்ரம்

கோவை