Thursday, May 10, 2018

மண்மீளா பறவை



இனிய ஜெயம் 


விடியும் வரை இந்த வரிகள் அளித்த மௌனத்  துயரில் மூழ்கிக் கிடந்தேன் .




 எனைப்போல எந்த ஒரு  நெருப்புக் கோழியும் அறிய இயலா வானமோ அது ? 

கருணாகரனின் கவிதை வரிகள் இவை 

அதனிடமில்லை
மீண்டும் கூடு திரும்பும்
நினைவின் நிழல்.
அது செல்லும் வழியில்
தன் சிறகுகளையும்
கொடுத்துச்சென்றது காற்றிடம்.
நெருப்புக் கோழிகளின் சிறகுகளுக்கு வானம் என்பதின் நிலை என்ன ? பறத்தல் என்பதன் பொருள் என்ன ? 

ஒரு வேளை மண்ணுக்குள் தலையை புதைத்து தேட வேண்டிய விடையோ ? 

உளறல் என்னுள்ளிருந்து எழுவதெல்லாம்  எல்லாம் வெறும் உளறல் .விடிந்தபின்னும் விலகி மறையாத நிலவு போலும் உளறல் .