விழைவே ஆடையாகிறது. மிகுவிழைவு அரிய, அழகிய, பெருமைக்குரிய ஆடை. விழைவு சுருங்குகையில் ஆடை சுருங்குகிறது என்றவரியின் அழகை யோசித்துக்கொண்டிருந்தேன். மனிதர்களின் ஆசையை
அவர்களின் உடைகளிலிருந்தே தெரிந்துகொள்ள முடியும். மனிதர்கள் ஆடைகளை சுமந்துகொண்டு
ஆடைகளே தாங்கள் என்று நினைத்துக்கொண்டிருக்கிறார்கள். ஆடையில்லாதவர் தன்னை ஆசையில்லாதவராகக்
காட்டுபவர். சுகரின் அந்நிலையை ஆடையில்லாத நிலை என்று மட்டுமே விளக்கமுடியும்
மதன்