Monday, May 28, 2018

நாடோடி



ஜெ

வெண்முரசில் பெயரில்லாத, முகமில்லாத சிலர் வந்துகொண்டே இருக்கிறார்கள். அவர்கள் சிலர் சூதர்கள். சிலர் நாடோடிகள். அவர்கள் சொல்லும் ஒற்றைவரி நக்கல்கள் வெண்முரசின் கிளாஸிக் தன்மையின் இன்னொரு முகம். போகிறபோக்கில் அவை வருகின்றன. முதற்கனலில் பீஷ்மரை நக்கலடிக்கும் சூதர் முதல் ஏராளமானவர்கள் வருகிறார்கள். இன்று வாசித்தபோது ஒரு வரி. காண்டீபத்தில் வணிகன் பாரதவர்ஷத்தை இணைப்பது எது என கேட்கிறான். வணிகம்தான் என்று சொல்லவருவது அவன் நோக்கம் ஆனால் நாடோடி வேறு ஒன்று சொல்கிறான். [“நாடோடி, நீ பல நாடுகள் சென்றிருப்பாய். ஒவ்வொன்றும் தங்களுக்குள் எப்படி இணைக்கப்பட்டுள்ளன? சொல்!” என்றார் முதுவணிகர். நாடோடி “நானறிந்தவரை பசியாலும் போராலும்” ]என்றான்அந்தப்பதிலுக்கு அங்கே இடமே இல்லை. அதை பொருட்படுத்தாமல் வணிகன் மேலே பேசுகிறான். அந்த இடம்பொருள் அறியாத வரி வரலாற்றின்மேல் எப்போதும் இருந்துகொண்டிருக்கும் அன்னியனின் கசப்பு நிறைந்த விமர்சனம் என நினைக்கிறேன்

ராஜ்மோகன்