Thursday, May 17, 2018

சாதகம்



ஜெ

உத்தங்கர் கேட்கும் கேள்விகளுக்கு கிருஷ்ணன் சொல்லும் விடைகளில் இருந்து ஒரு கருத்து எழுந்துவரவில்லை. ஒரு புதிர்தான் எழுந்து வந்திருக்கிறது

வேதமுடிபு வெறும்வியப்பை சொல்லென்றும் கருத்தென்றும் அவைநிலை என்றும் ஆக்கும் அறிவுச்செயல். 

பகுத்தறிந்து வரையறுத்து அறிவன அனைத்துக்கும் எதிர்நிலை. நிலைமயக்கி புறமழித்து இருமைவிலக்கி இன்மைவரை சென்று நின்று தன்னை நிறுவுவது. 

அவைகள் அனைத்திலும் அறிக, அறிதலைத் துறந்து மேலும் தெளிக என்றே அது அறைகூவும்

விளங்கும் அனைத்துக்கும் விளங்கா நிலையென்று நிற்பதை அறிந்தமைந்தோன் வீடுபெற்றவன்.

என்ற வரிகள் வழியாக செல்லும்போது அறிவது என்பது அறியக்கூடுவன அனைத்தையும் அறிவது என்றுதான் பொருள்படுகிறது. அறிந்தபின் அறியமுடியாது என எஞ்சுவதை உணர்ந்தபின் இன்மைவரை சென்று அதை உணரமுடியும். ஆனால் அவ்வாறுசெல்ல ஏதாவது வழிகளை வேதாந்தமரபு முன்வைக்கிறதா? வேதாந்தம் என்பதே ஒருவகையான cerebral exercise தானே?

செல்வக்குமார்

அன்புள்ள செல்வக்குமார்


இல்லை. வேதாந்தத்தில் இரு தரப்புகள் உண்டு. நவீனவேதாந்திகள் அதை ஒரு தத்துவமாக அணுகுபவர்கள். அவர்களிடம் அறிவார்ந்த விவாதம் மட்டுமே உண்டு. மரபான வேதாந்தத்தில் அறிதல் முதல்நிலை. சாதகம் செய்வதுதான் மெய்யான அடுத்தநிலை. அவை பெரும்பாலும் யோகாச்சார பௌத்த மரபை ஒட்டி உருவாக்கப்பட்டவையும்கூட

ஜெ