Thursday, May 17, 2018

வேதாந்தத்தின் பதில்கள்




ஜெ

தொடர்ச்சியாக வேதாந்தக் கல்வியில் இருப்பவன் நான். நூல்கள் தவிர ஓரிரு ஆசிரியர்களும் உண்டு. இன்றுதான் இமைக்கணத்தில் இந்த வரியை வாசித்தேன். “வேதமுடிபின்மீது கேட்கப்படும் அனைத்து வினாக்களுக்கும் அடிப்படை ஒன்றே. இங்கு இவ்வுலகின் இப்பொருட்களைக்கொண்டு அதை எப்படி அடைவது? அதை எவ்வகையில் நிறுவுவது?அதற்கு இளைய யாதவர் சொல்லும் பதில்களை தொகுத்தால் இப்படி வரும்

“வேதாந்தம் என்பது இந்த உலகின் பொருட்களை, கருத்துக்களை கொண்டு வேதாந்த்தத்தை நிறுவ முடியாது. இந்த உலகின் பொருட்களையும் கருத்துக்களையும் பேசும்போது எவரும் உணரும் ஒரு infinity யை விளக்கத்தான் வேதாந்தம் முயல்கிறது. அதை நுண்மையாக ஊகிக்கத்தான் முடியும். ஒரு புதிராக அல்லது ஒருவகை wordlessness ஆக உணரமுடியும், அவ்வளவுதான்.

இதுசரியா என்பதை இனிமேல்தான் யோசிக்கவேண்டும். ஆனால் சுருக்கமாகவும் கூர்மையாகவும் இருக்கிறது என நினைக்கிறேன்

ரங்கநாத்