Friday, May 18, 2018

விஸ்வரூபம்




ஜெ

உதங்கருக்குக் கிடைக்கும் பகவானின் விஸ்வரூபம் வேதரூபமாக இருக்கிறது. அவர் வைதிகரல்ல வேதமுடிபு மரபைச் சேர்ந்தவர். சாந்திபனிக்குருநிலைக்குச் செல்கிறவர். ஆகவே வேதமாகவே விஸ்வரூபம் எழுகிறது. ஆனால் அதில் அவர் முடிவிலியைக் காண்கிறார்

கோடிகோடி பாடல்கள் கொண்ட பெருங்காவியம். அதில் இனித்து இனித்து கடந்துசென்றேன். கோடிகோடிகோடி சொற்களால் ஆன வேதம். அதன் இசையில் ஆழ்ந்தேன். ஒரு தருணத்தில் அஞ்சி ஆசிரியரே, ஆசிரியரே என்று கூச்சலிட்டேன். அனைத்து அணிகளிலும் சொற்களிலும் என்னை அறைந்துகொண்டு அலறினேன். ஒரு சொல்லிடைவெளி வழியாக வெளியே வந்துவிழுந்தேன்

அஞ்சி வெளியே வந்து விடுகிறார். அதுதான் அவர்கண்ட பிரம்ம சுவரூபம். வேதங்களில் மௌனமாக அல்லது புதிராக வெளிப்படுவதே பிரம்மம். அதைத்தான் வேதாந்தமரபு சொல்கிறது. இந்நாவலில் ஒவ்வொருவருக்கும் எந்தெந்தவகையில் விஸ்வரூபம் அமைகிறது என்று பார்ப்பது ஒரு அற்புதமான வாசிப்பாக இருந்தது

எஸ்.ராஜேஷ்