Monday, May 21, 2018

பாதைகள் பல




ஜெ

பாதைகள் பல என்று உபநிஷதம் சொல்கிறது. கீதை எல்லாவற்றையுமே அங்கீகரிக்கிறது. இந்தவரிகள் அந்த தர்சனத்தை அருமையாகச் சொல்லிக்காட்டுகின்றன

அம்பின் பாதை

இலக்கன்றி எதையும் அறியாது. எதிர்ப்படும் அனைத்தையும் கிழித்துச் செல்கிறது.இதுவே வீரபக்தி

ஆ.எரியின் பாதை

உண்டு அழித்துச் செல்கிறது. எய்தும் கணம் அணைகிறது. இது உபாசனா பக்தி

இ. பறவையின் பாதை

வழிதொறும் கிளை தேடுகிறது. கிளைவிரித்து நின்றிருக்கின்றன தெய்வங்கள். இது பாவ பக்தி

ஈ.நதியின் பாதை

பிரிந்து பிரிந்து உணவூட்டிச் செல்கிறது. அணைகளை நிறைந்து கடக்கிறது. அனைத்து ஊற்றுகளையும் தன்னுடன் சேர்த்துக்கொள்கிறது. ஞானமார்க்கம்

உ முகில்களின் பாதை

பாதைகளற்றது. பிரிதலுக்கும் இணைதலுக்கும் அப்பாற்பட்டது. யோகமார்க்கம்

அனைத்துப் பாதைகளும் சென்றடைகின்றன. அனைத்திலும் நிறைவடைந்தவர்களின் அருள் பரவியிருக்கிறது. எந்தப் பாதையையும் ஞானியர் இறுதியெனச் சொல்லமாட்டார்கள் என்ற வரியில் கீதாதர்சனம் வெளிப்படுகிறது.

ராமச்சந்திரன்