ஜெ
யமி மனித உள்ளம் பற்றிச் சொல்கிறாள்.
ஒரு நவீன மனோவியலாளர் சொல்வதுபோல ஒலிக்கிறது.மனம் செயல்படும் விசித்திரமான வழிகளை சொல்லிவிடமுடியுமா
என்ன?
மானுட உள்ளம் தெய்வங்களும் அஞ்சித் திகைக்கும் சுழல்வழிப் பாதை. நுழைவன அனைத்தும் அங்குள்ள அனைத்துடனும் இணைந்துகொள்கின்றன. ஒவ்வொன்றும் பிறிதை முடிவிலாது வளர்க்கின்றன. ஒன்றை பிறிதால் மட்டுமே நோக்கமுடியும். நோக்குவதும் நோக்கப்படுவதும் நோக்கால் உருமாறிவிடுகின்றன. மாறுவது மாறுவதற்கு முந்தைய நிலை அனைத்தையும் அவ்வண்ணமே எஞ்சவிடுகிறது. மறைந்தது இருந்த தடம் மறைந்ததென்றே நின்றிருக்கிறது.
மனித மனதிலே ஒவ்வொன்றும் இன்னொன்றை
உருவாக்கி அழிக்கிறது. அழிந்தவை தடமாக மாறி நின்றுள்ளன. தடமும் ஒரு மனித எண்ணமாகவே
உள்ளது
எஸ்