Monday, May 7, 2018

திரௌபதி கண்ணன் உறவு




ஜெ

திரௌபதி கண்ணன் உறவு இதற்குமுன் ஆங்காங்கே கொஞ்சமாக வந்திருந்தாலும் இமைக்கணத்தில்தான் உச்சம் அடைகிறது. திரௌபதிக்கு கண்ணன் உண்மையில் யார் என்ன உறவு என்பதை இப்போதுதான் புரிந்துகொள்ளமுடிகிறது. அது காதல் அல்ல. சகோதர உறவு அல்ல. அது குரு சீட உறவு. ஆனால் சமானநிலையில் நின்று செய்யப்படும் நட்பு அது. அது கிருஷ்ணனை அழகுருவாக மட்டுமே பார்க்கும் பார்வை. சௌந்தரிய உபாசனை. சௌந்தரியரூபனாக மட்டுமே கண்ணனை அவள் பார்க்கிறாள். அதை மிகச்சரியாக அந்தக்கதையுடன் இணைத்துவிட்டீர்கள். அது பிற்காலக்கதை. அதை விட்டுவிட்டீர்கள் என நினைத்தேன். வரவேண்டிய இடத்தில் வந்துவிட்டது. சௌந்தரிய உபாசனை என்றால் ஒரு மலரிதழில் ஒரு காடுபோல பூவை உருவாக்குதல் என்று உபாசனையிலே சொல்வார்கள். ஒரு கீரையிலையில் கிருஷ்ணனுக்கு விருந்தளிப்பதே சௌந்தரிய உபாசனை. அற்புதமான அத்தியாயம் அது

அனந்தராம்