மதிப்பிற்குரிய ஜெயமோகன் அவர்கட்கு ,
ப்ரஹ்மமே மானுடனாக இருக்கப்பட்ட கிருஷ்ணன், மானுடனே ப்ரஹ்மமாமாகும் சுகனின் சந்திப்பில் ப்ரஹ்மம் தன்னை தான் உணரும் ஒரு சுழற்சியின் உச்சகட்ட இறுதியாக உணர்ந்தேன்.
அண்டம் எனும் முடிவிலா மாமலரின் ஒவ்வொரு இதழும் நானே நீ எனும் ஒரே ப்ரஹ்மத்தின் முடிவிலா பிரதிபலிப்புகள். அண்டம் எனும் மாயையை மறுத்து , பெருமாள் எனும் துவைதத்தையும் இறுதியில் உதிர்த்து , அதுவே நான் எனும் அத்வைத பெரும் அமைதியில் அமைகிறான் சுகன்.
ராம்