Sunday, May 20, 2018

வேதியரின் விஸ்வரூபம்




ஜெ

வெண்முரசு இமைக்கணத்திலே ஒரு நுட்பம் உள்ளது. அதை நானே இப்போது இரண்டாம் முறையாக வாசித்து ஒரு நண்பரிடம் பேசிக்கொண்டிருக்கும்போதுதான் உணர்ந்தேன். இதில் எல்லாருக்கும் ஏதோ ஒருவகை விஸ்வரூபதர்சனம் அளிக்கப்படுகிறது. ஆனால் கீதையில் சொல்லியுள்ள சரியான விஸ்வரூபதர்சனம் அளிக்கப்படுவது வேள்விசெய்யும் வைதிகர்களுக்காகத்தான். ஆகவே கீதையில் வரும் அந்த விஸ்வரூபதர்சனம் என்பது வேதியர்களுக்குரியது. அவர்களால் உருவகம் செய்யப்பட்டது என்று இமைக்கணம் சொல்கிறது என நினைக்கிறேன். பெருந்தோளனே, பல வாய்களும், பற்பல விழிகளும், எண்ணிலாக் கைகளும், முடிவிலாக் கால்களும், வயிறுகளும், நொறுக்கும் பற்களுமுடைய உன் வெளியுரு கண்டு விண்ணகங்கள் நடுங்குவதைக் கண்டோம் என்று அப்படியே கீதைவரியை தாங்கள் கண்டதாக வைதிகர்கள் சொல்கிறார்கள்.

சங்கர்