Sunday, May 13, 2018

கீதை நிகழுமிடம்




கீதையை எப்படிக்கொண்டுவருவீர்கள், தவிர்த்துவிடுவீர்களா என்றெல்லாம் எண்ணிக்கொண்டிருந்தேன். ஏனென்றால் கீதையில் பெரிய சிக்கல் உள்ளது. போர்க்களத்திலே தத்துவ விவாதம் என்பதெல்லாம் உருவகரீதியாகத்தான் சரிவரும். யதார்த்தமாக அதற்குப் பெரிய இடம் கிடையாது.

அதோடு கிருஷ்ணன் தன்னை கடவுளாகவே காட்டுகிறான். அதை அறிந்தபின் அர்ஜுனனை சாதாரணமனிதனாகக் காட்டமுடியாது. கிருஷ்ணனின் கதாபாத்திரத்தையும் அப்படியே தொடர்ந்து காட்டமுடியாது. சொல்லப்போனால் மகாபாரதப்போரே அர்த்தமில்லாததாக ஆகிவிடும்.

இந்தச்சிக்கலை நைமிஷாரண்ய விவாதங்களிலேயே கடந்துவிட்டிருந்தீர்கள். எல்லாமே ஒரு இமைக்கணத்தில் ஒரு மாயவெளியில் நிகழ்கிறது. அந்த சப்கான்ஷியஸ் தளத்தில் நடப்பவை அவர்கள் அறிந்தவை. ஆனால் யதார்த்தம் அல்ல. கீதையும் அந்தத்தளதிலே நடக்கிறது. அங்கே அவர் தெய்வம், அர்ஜுனன் அதை அறிகிறான். ஆனால் அதை அவன் கனவென்றே உணர்வான். ஞானம் மட்டுமே மிச்சமிருக்கும்

முருகேஷ்