ஜெ
பன்னிரு படைக்களத்தில் ஜராசந்தனின் கதாபாத்திரத்தை
இப்போதுதான் வாசித்துக்கொண்டிருக்கிறேன். நான் ஏற்கனவே எழுதிய இரண்டு கடிதங்களுக்கும்
உங்களிடமிருந்து பதில் இல்லை. இருந்தாலும் இதை எழுதவேண்டுமென்று தோன்றியது. நான் இருபத்தாறு
ஆண்டுகள் ஒரு பெரிய நிறுவனத்தின் தலைமைபொறுப்பில் இருந்த ஒருவரிடம் பீஏ ஆக வேலைபார்த்து
ஓய்வுபெற்றவன். அவருடைய குணாதிசயத்தை நான் கடைசிவரை சரியாகப்புரிந்துகொள்ளவில்லை. அவர்
கொடுமையானவர் . இரக்கமே கிடையாது. வெற்றி லாபம் ரெண்டும்தான் வாழ்க்கையில் முக்கியம்.
ஆனால் அதேசமயம் மிகவும் கருணையுடனும் அவ்வப்போது இருப்பார். பல விஷயங்களில் அள்ளி அள்ளி
விடுவார். நான் அது ஒரு உத்தி என நினைக்கிறேன் . அவர் கொடுமைசெய்யும்போது அவரை மக்கள்
வெறுக்கிறார்கள். அவர் ஒரு சின்ன நன்மையாவது செய்யக்கூடாதா என ஏங்குகிறார்கள். ஏனென்றால்
அவர் அப்படி ஒரு நன்மை செய்தால்தான் மனிதர்களைப்பற்றிய இவர்களின் தியரி சரியாகிறது
அவர் நன்மைசெய்ததும் அவர்கள் இவரை புகழ்ந்து கொண்டாட ஆரம்பித்துவிடுகிறார்கள். அந்த நன்மையை எண்ணி மிகையாக கண்ணீர் விடுகிறார்கள்.
என்ன இருந்தாலும் அவரு ஆளு ஜெண்டில்மேனுப்பா என்கிறார்கள்.
ஜராசந்தனை வாசிக்கையில்
அவரும் இப்படியே இருக்க்கிறார். ஜராசந்தன் மாத்திரமல்ல அனேகமாக அதிகாரத்தில் உள்ள எல்லாருமே
இரண்டாகப்பிரிந்தவர்கள்தான்
கிருஷ்ணசாமி