Thursday, May 10, 2018

சுகனும் திரௌபதியும்



ஜெ

இமைகக்ணம் ஒரு கட்டமைப்பை வந்தடைந்துவிட்டது. எப்படி எங்கே செல்லும் என்னும் ஒரு ஆர்வம்தான் நாவலை மனதுக்குள் மாறி மாறித் தொகுத்துக்கொள்ளச் செய்கிறதென நினைக்கிறேன். அறிவின் இயல்புகள். பின்னர் சாராம்சம். பின்னர் அறம். அதன்பின்னர் அழகியல். அதன்பின்னர் வேதம், வேதாந்தம். கடைசியாக பரமகம்சரின் இயல் என கீதையை பிரித்து அணுகியிருக்கிறீர்கள். இந்த கட்டமைப்புக்குள் கீதையின் எந்தெந்த அத்தியாயங்கள் அமைகின்றன என்று பார்ப்பது ஒரு தெளிவை அளிக்கும் என நினைக்கிறேன்.

இரண்டு உச்சங்கள் இந்நாவலில். வெறும் அழகு ஆக பரந்தாமனைப்பார்க்கும் திரௌபதி இவ்வுலகில் வைத்தே முக்தியை நாடுகிறாள். முக்தியை முழுமையாகத் துறந்து காலடிப்பொடி என பெருமாளின் பேரழகுத் தோற்றத்தை துறந்துசென்று சுகன் பரப்பிரம்மரூபனாக ஆகிறார். இரண்டு எல்லைகள். இரண்டுக்கும் கீதையில் இடமுண்டு என்பதுதான் நீங்கள் இந்நாவலில் அளிக்கும் தரிசனம் என நினைக்கிறேன்

மகாதேவன்