பொதுவாகக் கேட்கப்படும் கேள்வி
ஒன்றுண்டு.ஏன் ஞானிகளும் மகான்களும் இவ்வளவு அபூர்வமாக இருக்கிறார்கள்? ஏன் நிறையபேர்
அந்த வழியிலே சென்று ஜெயிக்கமுடியவில்லை? அவ்வாறு எல்லாரும் சென்று சேரமுடியாத நிலை
என்றால் அதை ஏன் ஒரு ஐடியல் ஸ்டேட் ஆக சொல்லவேண்டும்? சாமானியனுக்கும் சாத்தியமாகக்கூடிய
ஒரு வழிதானே நல்லது என்பார்கள்
அதற்கான பதில் ஏன் ஐன்ஸ்டீனும்
ஸ்டீபன் ஹாக்கிங்ஸும் அப்படி சாதாரனமாக இல்லை என்பதுதான்? புதுமைப்பித்தனோ மௌனியோகூட
அப்படி ஏராளமாக இல்லைதானே? எல்லா தளங்களிலும் மிகச்சிறந்தவர்கள் சிலராகவே இருக்கிறார்கள்.
அவர்களை நோக்கித்தான் மற்றவர்கள் சென்றுகொண்டிருக்கிறார்கள். அவர்களை மட்டும் வைத்து
மதிப்பிடக்கூடாது. எல்லா சயண்டிஸ்டுகளும் ஒருவகையில் ஐன்ஸ்டீன்மாதிரிதான்
ஆயிரம் முறை எம்பி ஒருமுறையே தொடுகிறது மானுடம். மாவீரர், பேரறிஞர், மாகவிஞர், அருங்கலைஞர் பல்லாயிரம் மானுடரின் விழைவின் நிறைவேற்றங்கள். அவர்கள் முடிவிலாதெழுக!
என்று இமைக்கணத்திலே கிருஷ்ணன்
சொல்கிறார்
பாஸ்கர்