Wednesday, May 16, 2018

அறிஞனும் யோகியும்




ஜெயமோகன் அவர்களுக்கு

இமைக்கணத்தில் உதங்கருக்குச் சொல்லப்படும் கீதை சம்சார மரத்தைப் புகழ்வதிலே முடிகிறது

அது வானில் வேர்களும் மண்ணில் கிளைகளும் கொண்ட மரம். இலைகளும் தளிர்களும் மலர்களும் கனிகளும் என இங்கு தழைக்கிறது. அதன் விதைகள் வானில் விதைக்கப்படுகின்றன. அதன் சாறென ஓடுவது வானின் ஊற்று. இங்கு ஒவ்வொரு இலையிலும் மலரிலும் சருகிலும் வானம் உள்ளது.

ஆனால் அதன்பின்னர் சுகனுக்குச் சொல்லப்படுவது அந்த மரததை எப்படி வெட்டிவீழ்த்துவது என்பதைப்பற்றி. ஆச்சரியமாக இருந்தது இந்த மாற்றம். உதங்கர் அறிஞர். அவர் தெளிநீர் விரும்புபவர். அவருக்கு சம்சாரத்தின் அழகுதான். ஆனால் சுகர் யோகி. அவருக்குரியது அந்த மரமே மறைந்துவிடுவது.

சுகர் அந்த மரத்தின் நிழலை வேண்டாம் என்று ஒதுக்கி மேலே செல்கிறார். ஆகவே பரநிலையை அடைகிறார்

சங்கர நாராயணன்