அன்புள்ள ஜெ
ராமனின் முடிவையும்
கிருஷ்ணனின் முடிவையும் யமனுடன் சேர்ந்து ஒப்பிட்டுப்பார்த்தேன். எனக்கே சிரிப்புதான்
வந்தது. ராமன் வாழ்க்கைமுழுக்க பாசத்தால் கட்டப்பட்டவன். குகனொடும் ஐவரானோம் என்று
சொன்னவன். அவன் பாசத்தில் மூழ்கிச் செத்தான். கிருஷ்ணன் ஐரனிகளில் விளையாடியவன். புல்லாங்குழலும்
ஸ்ரீசக்ரமுமே பெரிய ஐரனிகள். ரெண்டும் போல பல ஐரனிகள் வாழ்க்கை முழுக்க. கடைசியிலே
ஐரனியாகவே சாவும் வந்தது. சர்ப்பத்துடன் விளையாடினால் சர்ப்ப தம்சனம்தான் மிச்சம் என்று
வைஷ்ணவத்திலே சொல்வதுண்டு. அவதாரமே ஆனாலும் அதுதான் கதி. அந்த அபத்தத்தை ஞாபகம் பண்ணித்தான்
யமன் சிரிக்கிறான் என நினைக்கிறேன்
சாரதி