Friday, May 11, 2018

பாவபக்தி



ஜெ

திரௌபதிக்கும் கிருஷ்ணனுக்கும் நடக்கும் விவாதம்தான் இந்நாவலின் உச்சம் என நினைக்கிறேன். கிருஷ்ணனின் விஸ்வரூபம் வருவது அதற்குள்தான். எல்லாருக்கும் ஏதோ ஒரு விஸ்வரூபம் காட்டப்பட்டாலும் கீதையிலுள்ள விஸ்வரூபம் அங்கேதான் வருகிறது. ஆனால் அவள் அதை கிருஷ்ணனின் விஸ்வரூபமாக அல்ல கிருஷ்ணையின் அதாவது சக்தியின் விஸ்வரூபமாகவே பார்க்கிறாள். அங்கேதான் எல்லாமே சொல்லப்பட்டுள்ளது. ஸ்ரி வைஷ்னவர்களைப்பொறுத்தவரை கீதையே விஸ்வரூபதர்சனத்துடன் முடிவுக்கு வந்துவிட்டது. திரௌபதி காணும் அழகுருவம்தான் வைஷ்ணவத்தின் உச்சமான தர்சனம் என்று சொல்லலாம். பகவானை பேரழகாகக் கண்டு பாவபக்தி செலுத்தினாலே போதுமானது. அதற்குமேலுள்ள வேதஞானம் வேதாந்தஞானம் ஜீவன்முக்திநிலை எல்லாம் பக்தர்களுக்குத்தேவையே இல்லை. திரௌபதியுடன் இமைக்கணமும் முடிந்துவிட்டது என்பதே என் எண்ணம்

ரங்கராஜ்