Wednesday, May 23, 2018

கதைகள்




ஜெ

இந்த சின்னநாவலுக்குள்  [இமைக்கணம்] என்னென்ன வந்திருக்கிறது என்று திரும்பிப்போய் பார்த்தேன். வசுஷேணரின் கதை அப்படியே நீண்டு சென்று மொத்த குருகுலத்தின் எதிர்காலம் வரைச் செல்கிறது. யுதிஷ்டிரனுடைய கதையும் அதேபோல ஜனமேஜயன் மைந்தர்கள் வரைச் செல்கிறது. இமைக்கணத்தில் இறந்தகாலமும் எதிர்காலமும் இருபக்கங்களிலாக விரிந்து ஒரே புள்ளியில் நிலைகொள்கின்றன. எவ்வளவு கதைகள். இன்னொரு முறை இக்கதைகளை ஆரம்பத்திலிருந்தே வாசிக்காவிட்டால் நினைவில் இந்நாவலைத் தொகுத்துக்கொள்ள முடியாது. ஜனகரின் கதை, மாயாசீதை, உத்தர ராமாயணம், நளாயினி கதை  என்று விரிந்துகொண்டே செல்கிறது

அருண்