அன்புள்ள ஜெ,
இமைக்கணத்தில் கீதையின் முதன்மை சொல்லப்படுகிறது. அதன் முக்கியமான அம்சமென்பது அது எல்லாச் சிந்தனைகளுக்கும் இடமளிக்கிறது. எல்லாவற்றுக்கும் ஒரு இடத்தை அளித்து ஒன்றாகத் தொகுத்து வேதாந்தத்தை நடுவே நிறுத்துகிறது என்பதுதான். அதோடு வேதாந்தத்தை ஒரு மதக்கொள்கையாக நிறுத்தாமல் தனிமனிதனே உணரும் ஒரு sublime ஆகவும் அவன் சென்றடையவேண்டிய ஒரு lonely path ஆகவும் சொல்கிறது என்பதுதுதான். இன்னதெய்வம் இன்ன வழிபாட்டுமுறை இன்னின்ன சடங்குகள் வேள்விகள் என்றெல்லாம் சொல்லவில்லை.
அப்படிச் சொல்லியிருந்தால் அது அனைவருக்கும் உரிய கொள்கையாக ஆகமுடியாது. மறுபக்கம் வேதம், வேள்வி, வேதக்கடவுள்களை மட்டும் முன்வைக்கும் தரப்பு. இந்தப்பக்கம் இந்த ஒரு all comprising தரப்பு. அசுரர்கள் போன்றவர்கல் இந்தப்பக்கம் நின்றது இதனால்தான். இதனால்தான் இந்தத்தரப்பு ஜெயித்ததும் இந்திய வரலாறு மாறியது. அத்தனை மதக்கொள்கைகளையும் உள்ளடக்கும் பெரியமதமாக இந்துமதங்களின் பிரிவுகள் ஆகி இந்தியாவில் உள்ள எல்லா குடிகளும் அதன் குடைக்கீழெ வந்தார்கள். இந்தியா வலுவான நாடாக ஆயிரமாண்டுக்காலம் நீடித்தது. கீதைக்காகவே மகாபாரதப்போர் என்றால் அதை இப்படித்தான் புரிந்துகொள்ளவேண்டும்
கீதை சாந்தீபனி குருகுலத்தின் சிருஷ்டி. அது எல்லாவற்றையும் தீபமாக ஆக்கும் மரபு என்று வெண்முரசிலே முன்னர்வந்தது
மனோகர்