Tuesday, May 22, 2018

நீலமும் இமைக்கணமும்




அன்புள்ள ஜெ

இமைக்கணத்துடன் நீலத்தை வாசிப்பது ஒரு நல்ல அனுபவமாக இருந்தது. இமைக்கணத்தில் கிருஷ்ணன் சொல்லும் தத்துவமும் ஞானமும் அவர் காட்டும் விஸ்வரூபமும் ஒருவகையில் உள்ளன என்றால் கிருஷ்ணன் கைக்குழந்தையாக வரும் நீலம் வேறு ஒருவகை. அந்தக்கிருஷ்ணனை என்ன செய்வது என்ற எண்ணம் வந்துகொண்டே இருந்தபோதுதான் திரௌபதி வந்தாள். அவளிடம் அவளுடைய வழியையும் கிருஷ்ணன் அங்கீகரித்து அவளை பேரன்னையாகக் காட்டியபோது பெரிய மனநிறைவு உருவானது என்னதான் தத்துவமாக வந்தாலும் நீலத்தைக் கைவிடவேண்டியதில்லை என்று தோன்றியது

ராதிகா